குலாம் நபி ஆசாத் கைது: காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு!

0

பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் உங்களுடன் வந்து நடிப்பார்கள் என அஜித் தோவல், காஷ்மீர் மக்களுடன் உணவு சாப்பிட்டதை குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். அவரை கைது செய்து காஷ்மீரில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிறகு காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சோபியான் பகுதி மக்கள் சிலருடன் பேசியது, அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. எல்லாம் சரியாக செல்வதாகவும், உங்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பு எனவும் உள்ளூர் மக்களிடம் தோவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், “பணம் கொடுத்து யாரை வேண்டுமானாலும் உங்களுடன் சாப்பிட வைக்கலாம். 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளூர்வாசிகள் சிலரிடம் பணம் கொடுத்து நடிக்க வைத்து, மத்திய அரசு இந்த வீடியோவை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். தற்கிடையே காஷ்மீரில் கைது செய்யப்பட்ட குலாம் நபி. உடனே காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments are closed.