குல்பர்க் சொசைடி தீர்ப்பில் திருப்தியில்லை. சட்டப் போராட்டம் தொடரும்: ஜாக்கியா ஜாஃபரி

0

2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது காங்கிரஸ் எம்.பி இஹ்சான் ஜாஃபரி உள்ளிட்ட 69 பேரை 400 பேர் கொண்ட கும்பல் குல்பர்க் சொசைடியில் வைத்து படுகொலை செய்தனர். இந்த படுகொலை குறித்த வழக்கின் தீர்ப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 66 பேரில் 24 பேர் குற்றவாளி என்றும் மற்ற 36 பேர் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பு கொலை செய்யப்பட்ட எம்.பி இஹ்சான் ஜாஃபரியின் மனைவி ஜாக்கியா ஜாஃபரி கருத்து தெரிவிக்கையில், 36 பேர் விடுவிக்கப்பட்டது குறித்து தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக அவர் கூறியுள்ளார். இன்னும் நீதிக்கான தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜாக்கியா ஜாஃபரி கூறுகையில், “இந்த தீர்ப்பில் நான் திருப்தியடையவில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் மக்களை கொன்று குடும்பங்களை அழித்தது போன்று அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்தவற்றை நான் என் கண்கலால் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.

இன்னும் ஒரு பெண்ணாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை தன்னால் கேட்க முடியாது என்றும் ஆனால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் விருப்பதிற்குரியவர்களை விட்டு பிரிந்ததும் தான் நாங்கள் எதிர்கொண்டு வரும் வேதனை அவர்களுக்கு புரியும் என்று அவர் கூறியுள்ளார்.

“என்னுடைய இந்த போராட்டம் நின்றிருக்க வேண்டும். ஆனால் இன்றை தீர்ப்பினால் இந்த போராட்டம் தொடரும்” என்று ஜாஃபிரி கூறியுள்ளார். இவரது மகன் தன்வீர் ஜாஃபரி இந்த 36 பேர் விடுவிக்கப்பட்டது குறித்து தனது வழக்கறிஞருடன் ஆலோசனை செய்யப்போவதாக கூறியுள்ளார். 400 பேர் ஈடுபட்ட கலவரத்தை எப்படி 24 பேர் மட்டும் குற்றவாளிகள் என்று கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் குல்பர்க் சொசைடி ஒரு சிறிய தேநீர் கடை அல்ல, ஒருவர் எரிப்பதற்கு. இது மிகப்பெரிய இடம், இங்கு 15 இல் இருந்து 20 பங்களாக்கள் உள்ளன, 400 இல் 500 மக்கள் வசிக்கும் 10 அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளன. வெறும் 24 பேர் எப்படி இந்த மொத்த இடத்தில் உள்ள மக்களை கொன்று பொருட்களை சேதப்படுத்தி சூறையாட முடியும் என்று அவர் கேள்வி எழுபியுள்ளார்.

தங்களது இந்த சட்டப்போராட்டத்தை குறித்து கூறிய தன்வீர், “இது எனக்கும் என் தாயாருக்கும் மிக நீண்டதொரு போராட்டம். எங்கள் அனைவருக்கும் இது கடினமான பயணம்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.