குல்பர்க் சொசைட்டி வழக்கு தீர்ப்பு நீதித்துறையின் பரிகாசம்: SDPI

0

குல்பர்க் சொசைட்டி படுகொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக எஸ்.டி.பி.ஐ. தெரிவித்துள்ளது. 2002 குஜராத் கலவரத்தின் போது 69 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நீதிரையின் பரிகாசம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது நாம் அறிந்தது, ஆனால் இவ்வழக்கில் நீதி தாமதிக்கப்பட மட்டும் இல்லை சிதைக்கப்பட்டுள்ளது என்று தங்கள் அறிக்கையில் எஸ்.டி.பி.ஐ தெரிவித்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ இன் தேசிய தலைவர் ஏ.சயீத் தனது அறிக்கையில் கூறுகையில், தற்போது வெளியான நீதி தாமதிக்கப்பட்ட நீதியின் தெளிவான உதாரணம் என்று கூறியுள்ளார். அவ்வபோது பொதுமக்களின் கவனத்தில் இந்த வழக்கு இருந்து வந்த போதும் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க 14 வருடங்கள் ஆகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆனாலும் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இந்த வழக்கில் தீர்ப்பு அமையவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தாமதிப்பது நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழித்துவிடும் என்றும் சாட்சியங்களின் மரணங்கலாளும் சந்தேகத்தின் பேரிலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க குற்றவாளிகளை பெரும்பான்மை பலத்தை கொண்டு காப்பாற்றுவதை தொடரும் என்று தெரிகிறது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசியல் ரீதியில் இது எதிர்த்து போராடப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கலவரக்காரர்களை இச்சமூகத்தின் அச்சுறுத்தலாக கருதாமல் அவர்கள் சீர்திருத்தப்படலாம் என்று நீதிபதி கூறியிருப்பது அவர்களின் தண்டனைகளை ரத்து செய்ய அரசுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார். நாகரிக சமுதாயத்தில் இது ஒரு கருப்பு தினம் என்றும் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரிதிலும் அரிதான குற்றங்கள் அதிகாரத்தில் இருந்த பா.ஜ.க உதவியுடன் நடத்தப்பட்டிருகின்றது என்றும் ஆனாலும் எஸ்.ஐ.டி நீதிபதி குறைந்தபட்ச தண்டனையை வழங்கியுள்ளார், நீதித்துறையில் இருந்து நீதியை எதிர்ப்பார்த்தவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம் என்று அவர் கூறியுள்ளார்.

எப்படியாகினும் கலவரக்காரர்களை நீதியின் முன் நிறுத்திய சிறப்பு விசாரணை படையின் முயற்சியினை அவர் பாராட்டியுள்ளார். இத்தகைய நிகழ்வுகள் சுதந்திர இந்தியாவில் அரிது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.