குல்பர்க் படுகொலை வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை கோரும் SIT

0

2002 குஜராத் கலவரத்தின் போது குல்பர்க் சொசைடியில் நடத்தப்பட்ட படுகொலை தொடர்பான வழக்கில் 36 பேரை விடுவித்தும் 24 பேர் குற்றவாளிகள் என்றும் நீதிமன்றம் தீர்பளித்திருந்தது. தபொழுது குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்களின் இறுதி மூச்சு வரை சிறையில் அடைத்து தண்டிக்கப்பட வேண்டும் என்றும் SIT கூறியுள்ளது.

இந்த 24 பேர்களில் 13 பேர் சிறிய குற்றங்கள் புரிந்துள்ளனர் என்றும் மற்ற 11 பேர் கொலை உட்பட கொடிய குற்றங்கள் புரிந்துள்ளனர் என்றும் அதனால் இந்த மரண தண்டனையில் அந்த 13 பேர்களுக்கு விதிவிலக்கு தரலாம் என்று கூறியுள்ளது.

குற்றத்திற்கான தண்டனை குறித்த விசாரணையின் போது SIT யின் சட்ட ஆலோசகர் ஆர்.சி.கொடேகர் 11 பக்க அறிக்கையை சிறப்பு நீதிமன்றம் முன் சமர்பித்தார். அந்த அறிக்கையில் இவர்கள் புரிந்த குற்றம் அரிதிலும் அரிதானது என்றும் அதனால் இதற்கு மரண தண்டனை தவிர வேறு எதுவும் சரியான தண்டனையாக அமையாது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த குற்றம் வெறும் கொலையாக கருத முடியாது என்றும் இந்த குற்றச்செயல் சமுதாயத்தின் மனசாட்சியையே அதிரவைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்தரப்பு வழக்கறிஞர் அபே பரத்வாஜ், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது போல இந்த நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் என்று நீதிமன்றம் நம்பவில்லை என்றும் அதனால் மரண தண்டனை இந்த வழக்குக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஒத்தி வைத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாஃபரி உட்பட 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைடி வழக்கின் தீர்ப்பு தனக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று கொல்லப்பட்ட இஹ்சான் ஜாஃபரியின் மனைவி ஜாக்கியா ஜாஃபரி தெரிவித்திருந்தார்.

Comments are closed.