குல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

0

குல்பூஷன் ஜாதவிற்கு சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததற்தாக கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டது.

ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண  தண்டனையை எதிர்த்து இந்தியா, இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க  கேட்டுக்கொண்டது. பின்னர் இவ்வழக்கை ஏற்ற சர்வதேச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தடை செய்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் இருதரப்பு வழக்கை விசாரித்த தலைமை வழக்கறிஞர் அப்துல்காவி அஹமது யூசுப் அமர்வு, குல்பூசன் ஜாதவிவைத் தூக்கிலிட தடை விதித்தது. மேலும் குல்பூசனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் பதிவில், “சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சட்டத்தின் படி இந்த விவகாரத்தை கையாள்வோம். குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும், குல்பூஷனை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை” என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Comments are closed.