குழந்தைகள் பாதுகாப்பாக இணையதளத்தில் தேட – KIDDLE தேடு பொறி

0

கணினி யுக குழந்தைகள் தங்களின் கேள்விகளை பெற்றோரிடம் கேட்பதை விட இன்று கூகிளிடம் கேட்பது தான் அதிகம். அப்படி கணினி பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு இணையத்தள அமைப்பினை ஏற்படுத்தி தருவது ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்பு.

பெற்றோர்களின் இந்த வேலையை சுலபமாக்கியுள்ளது கிட்டில். www.kiddle.co என்ற இந்த தேடு பொறி கூகிள் நிறுவனத்தின் safe search ஐ அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் தேடப்படும் தகவல் சிறுவர்களுக்கு உகந்தது தானா என்று சோதிக்க ஒரு குழுவும் பணி செய்கிறது. அதனால் தேவைஇல்லாத ஆபாசங்களும் வன்முறைகளும் குழந்தைகளின் பார்வைக்கு செல்வதை விட்டு தவிர்க்கலாம்.

மேலும் இந்த தேடு பொறியில் கிடைக்கும் பதில்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் படங்களுடனும் பெரியதாகவும் அமைத்திருப்பதோடு குழந்தைகள் அவர்களுக்கு தகாத விஷயங்களை தேடும்போது அதனை தடுப்பதும் சிறப்பாய் வடிவமைக்கப் பட்டுள்ளது.

எப்படியானாலும் இன்றைய குழந்தைகள் பெற்றோருக்கு கற்றுக்கொடுப்பவர்கள். அதனால் குழந்தைகள் கணினி பயன்படுத்தும் போது அவர்களுடன் இருப்பது சிறந்தது. மேலும் குழந்தைகளின் கணினி பயன்பாட்டின் மீது அவ்வபோது ஒரு கண் வைத்துகொள்வது நல்லது.

இதற்கு நீங்கள் கூக்கிள் குரோம் உலாவியில் (Browser) உங்கள் கூகிள் கணக்கை சைன் இன் செய்து வைத்துக்கொண்டால் போதும். கூகிளில் தேடப்படும் அனைத்து தகவல்களும் உங்கள் கணக்கோடு சேர்க்கப்படும். அதனை நீங்கள் எங்கு இருந்து கொண்டும் www.google.com/history என்கிற முகவரியில் சென்று பார்க்கலாம்.

கிட்டில் தளத்தின் முகவரி www.kiddle.co (.com அல்ல .co)

மேலும் படிக்க: தொழில்நுட்பம்

Comments are closed.