குழந்தைகள் மீதான இஸ்ரேலின் கொடூரங்கள்!

0

-செய்யது அலி

ஃபலஸ்தீனின் மேற்குக் கரையின் ரமல்லாவில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் மாணவர் உமர் அல் ரிமாவி படிப்பில் கெட்டிக்காரர். அத்தோடு கால்பந்தாட்டத்திலும், நீச்சல் மற்றும் கராத்தேயிலும் சிறந்து விளங்குபவர். அவரை மருத்துவராக்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவு. ஆனால், இன்று சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் மகனின் புகைப்படத்தைக் கண்டு உடைந்துபோகிறார்கள் அவரது பெற்றோர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை வேளையில் ஆங்கில மொழி கற்கும் வகுப்பிற்கு சென்ற உமர், பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. உமர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ‘கலந்தியா’வில் உள்ள விசாரணை முகாமிற்கு செல்லுமாறும் அவரது தந்தை சமீர் மஹ்மூத் அல் ரிமாவிக்கு இஸ்ரேல் உளவுத்துறையிடமிருந்து தொலைபேசியில் தகவல் வந்தது. ஆனால், தனது மகன் எங்கிருக்கிறான் என்று கேட்பதற்கு முன்னால் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

உமர் மற்றும் அவரது நண்பர் அய்மன் அல் சபாஹ் ஆகியோர் ரமல்லாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வைத்து சுடப்பட்டதாக சில நிமிடங்களில் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இராணுவத்தின் மீது கல் வீசியதாக குற்றம் சாட்டி 14 வயதான சிறார்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கியால் சுட்டது. ஆறு தினங்கள் கழித்து சமீர், அவரது மகனை மருத்துவமனையில் வைத்து சந்தித்த போது கை, கால்கள் கட்டப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காவலுக்கு ஆயுதம் ஏந்திய மூன்று இராணுவத்தினர் அருகே நின்றிருந்தனர். நெஞ்சு, முதுகு, கை ஆகிய உடல் பகுதிகளில் தோட்டாக்கள் துளைத்திருந்தன. இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் உமர் மீது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் அளவிலான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. உமரைப் போலவே 300க்கும் அதிகமான சிறார்கள் இஸ்ரேலிய சிறைகளில் தங்கள் பால்ய பருவத்தை தொலைத்து வருகின்றனர்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.