குழந்தைகள் மீதான வன்முறையின் தாக்கம்

0

குழந்தைகள் மீதான வன்முறையின் தாக்கம்

ஜம்மு கஷ்மீரில் 2003 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒன்று முதல் பதினேழு வயது வரையிலான 318 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பான ஜம்மு கஷ்மீர் சிவில் சமூக கூட்டமைப்பு தனது சமீபத்திய அறிக்கையில் (“Terrorised: Impact of Violence on the Children of Jammu and Kashmir) தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் 4,571 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறும் இவ்வறிக்கை, இதில் குழந்தைகளின் சதவிகிதம் 6.95 என்றும் சுட்டிக்காட்டுகிறது. மொத்தம் 16,436 நபர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் அதில் பெரும்பான்மையினர் (8,537) தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதை நோக்கமாகக் கூறும் அரசு வன்முறையின் நேரடி இலக்குகளாக குழந்தைகள் இருப்பதை இந்த புள்ளிவிபரம் காட்டுகிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. இதில் 144 குழந்தைகள் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையால் கொல்லப்பட்டதாகவும், பல்வேறு வன்முறை நிகழ்வுகளின் போது 110 குழந்தைகள் சுடப்பட்டு இறந்ததாகவும் பாதுகாப்பு படையினரின் பெல்லட் குண்டுகள் ஏற்படுத்திய காயங்கள் காரணமாக எட்டு குழந்தைகள் இறந்ததாகவும் அந்த அறிக்கை விரிவாக கூறுகிறது. மேலும் பாதுகாப்பு படையினர் துரத்தும் போது வேறு வழியின்றி நீர்நிலைகளில் விழுந்தது பாதுகாப்பு படையினரின் கவனமின்மை காரணமாக உலார் ஏரியில் விழுந்தது என 27 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கொலை செய்யப்பட்ட 318 குழந்தைகளில் 13 பேர் இரண்டு வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் இரண்டு முதல் 12 வயதிற்குட்பட்டவர்கள் 121 பேர் என்றும் 13 முதல் 17 வயதிற்குட்பட்டவர்கள் 154 பேர் என்றும் அறிக்கை கூறுகிறது. இர்பான் என்ற பத்து மாத குழந்தைதான் இந்த காலகட்டத்தில் கொல்லப்பட்ட மிக இளவயது குழந்தையாவான். 2010ல் வடக்கு கஷ்மீரின் பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையில் இவன் தாய் சிக்கிய போது இர்பான் கொல்லப்பட்டான்.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.