குவாண்டனாமோ சிறைச்சாலையை மூடுவதற்கு 56% அமெரிக்கர்கள் எதிர்ப்பு

0

அமெரிக்காவின் குவாண்டனாமோ பே சிறைச்சாலையை மூடுவதற்கு 56% அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2009 இல் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்ற போது குவாண்டனாமோ சிறைச்சாலையை மூடப்போவதாக அறிவித்திருந்தார். அவருடைய அந்த அறிவிப்பிற்கு அப்போது 42% அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஒபாமா அறிவித்ததன் பின்னும் இன்று வரை மூடப்படாத அந்த சிறைச்சாலையை மூடுவதற்கான திட்டத்தை மீண்டும் ஒபாமா அறிவித்ததும் அதற்கு 56% அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு சிறை வைக்கப்பட்டவர்களை மீண்டும் அமெரிக்க வர அனுமதிக்க கூடாது எனவும் அவர்கள் அமெரிக்க தேசத்திற்கு ஆபத்தானவர்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது அங்கே அடைக்கப்பட்டுள்ள 91 கைதிகளில் சிலர் அமெரிக்காவிற்கு மாற்றப்படுவார்கள் என்றும் இடம்மாற்றம் செய்யப்படாத மற்ற கைதிகளால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது பற்றி ஆராயப்படும் என்றும் ஒபாமா தெரிவித்திருந்தார். மேலும் இந்த கைதிகளில் ராணுவ விசாரணை நடத்தப்படக்கூடிய கைதிகள் பற்றியும் ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.