கூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு

2

இஸ்ரேலின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சிபி ஹோடவ்ளி இஸ்ரேல் எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்யயுடியுப் மற்றும் கூகிளின் பிரதிநிதிகளுடன் இந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தினார் என்று இஸ்ரேலிய ஹீபிரியு மொழிபத்திரிகையான மாரிவ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் பேச்சு வார்த்தையின் சாராம்சமாவது, இஸ்ரேலுக்கு எதிராக வன்முறை தூண்டும் அல்லது மக்களுக்கு கோபமூட்டும் காணொளிகளை தணிக்க செய்து யுடியுப் கூகிளில் இருந்து நீக்கம் செய்வது தான். இந்தச் சந்திப்பில் யுடியுபின் சி.ஈ.ஓ. சுசான் மற்றும் கூகிளின் மக்கள் கொள்கை இயக்குநர் ஜென்னிபர் ஐ கூகிளின் சிலிகான் வேலிஅலுவலகத்தில் ஹோடவ்ளி சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் ஒரு சிறந்த ஆய்வு நுட்பத்தினை கூகிளிடம் இருந்து தான் பெற்றதாகவும் இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான சிந்தனைகள் வளர்க்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் இஸ்ரேலில் நடந்ததாக கூறப்படும் கத்திகுத்து சம்பவங்களை குறிப்பிட்டு “இது போன்ற சம்பவங்கள் இஸ்ரேலுக்கு எதிரான காணொளிகள் மற்றும் சமூகவலைத்தள பதிவினாலேயே ஏற்படுகின்றது” என்றும் “இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தவிர்க்கவே இந்தத்தணிக்கை முடிவு” என்று கூறியுள்ளார்.

மேலும் “கூகிள் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை உடனான உறவுகளை வலுப்படுத்த அங்கீகரித்துள்ளது” என்றும் “தங்கள் தளத்தில்வெளியிடப்படும் பதிவுகளை இஸ்ரேலுடனான கூட்டு முயற்சியில் தணிக்கை செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள சமீபகாலத்தில் குழந்தைகளைத் தாக்குதல், பாலஸ்தீனியர்களை கொலை செய்வதுபோன்ற பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அடக்குமுறைகளை உலகிற்குத் தெரியப்படுத்தும் காணொளிகள் பலசமூக வலைத்தளங்கள் மூலம் பரவி வருகிறது. இது இஸ்ரேலின் செல்வாக்கை சர்வதேச அளவில் பெருமளவுபாதித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய மக்களிடையே இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான விமர்சனகள் எழுந்துள்ளன.பொதுவாகத் தாங்கள் ஹோலோகாஸ்டிற்கு பலியானவர்கள் என்ற பிம்பத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும்பழக்கமுடைய இஸ்ரேல் தங்களின் உண்மை முகம் உலகத்திற்குத் தெரிந்து விட்டால் ஹோலோகாஸ்டின் அனுதாபஅலைகளைப் பெற முடியாது என்று அச்சமுற்றுள்ளது.

தற்பொழுதும் பாலஸ்தீனில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் தங்களை இஸ்ரேலியராணுவத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் பதிவு செய்யும் எந்த காணொளியும் இஸ்ரேலியராணுவத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்களிடம் தரப்படும். இத்தகையை கெடுபிடிகளையும் மீறி வெளியுலகத்திற்குவரும் காணொளிகளையும் கூகிள் மூலம் தடுக்க நினைக்கிறது இஸ்ரேல்.

கூகிள் இஸ்ரேலுடன் கை கோர்ப்பதைப் பல சர்வதேச பத்திரிக்கையாளர்கள் வெகுவாக கண்டித்துள்ளனர். இது பத்திரிகைசுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர். இஸ்ரேல் தொடர்பான பதிவுகளை ஃபேஸ்புக் தணிக்கை செய்கிறது என்ற செய்திக்கு பின்னர் கூகிளின் இந்த இஸ்ரேல் உடனான கூட்டு இணையதள சுதந்திரத்தையும் இந்த இணைய தளங்களின் நடுநிலையைக்கேள்விக்குறியாக்குகிறது.

கூகிளின் தேடுபொறிக்கு மாற்றாக www.duckduckgo.com போன்ற தேடுபொறிகள் இருக்கின்ற போதும் பெரும்பாலான மக்கள் கூகிளை தேர்ந்தெடுப்பது அதன் சுதந்திரத் தன்மையினால் தான்.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூகிளின் அப்போதைய சி.ஈ.ஓ வான எரிக் ஷ்மிடிட் கூகிள் பயனாளர்களின் அந்தரங்க தகவல் பற்றி கருத்து தெரிவிக்கும் போது “If you have something that you don’t want anyone to know, maybe you shouldn’t be doing it in the first place.” என்று கூறினார். கூகிளின் இந்த கொள்கைக்கு இஸ்ரேல் மட்டும் விதிவிலக்காவது எப்படி?

இந்த தணிக்கை முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றால் பத்திரிக்கை சுதந்திரத்தை விரும்பும் அனைவரின் எதிர்ப்பையும் கூகிள் சம்பாதிக்க நேரிடும். அதுவே இந்தத் தளங்களின் அழிவாகவும் மாறும்.