கூடங்குளம் அணுக்கழிவுப் பிரச்சினை

0

கூடங்குளம் அணுக்கழிவுப் பிரச்சினை

அணுக்கழிவு மிகவும் அழுக்கானதும், ஆபத்தானதும், பெரும் செலவினம் கொண்டதுமாகும். இது பொதுமக்களின், சுற்றுச்சூழலின், வருங்காலத்தின் மீது பெரும் தாக்கங்களை எழச் செய்வதால், இந்தப் பிரச்சினையை அரச இரகசியமாக வைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அணுவைப் பிளந்து எரிசக்தி எடுக்கும் அறிவும், திறனும் பெற்றுவிட்ட நாம், அதனால் எழும் கழிவுகளை, அவற்றின் அழிவுகளைக் கையாளத் தெரியாமல் திகைத்து நிற்கிறோம். கதிரியக்க பூதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் நாம், அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். கதிர்வீச்சுக் கழிவுகளை அழித்தொழிக்க முடியாது; அவை தங்கள் வாழ்நாள் முழுவதையும் நிறைவு செய்து, நிலத்தை, நீரை, காற்றை, கடலை என அனைத்தையும் அழித்து முடிக்கும்வரை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அணு உலையிலிருந்து உயர்தரக் கழிவு (லீவீரீலீ-றீமீஸ்மீறீ ஷ்ணீstமீ), நடுத்தரக் கழிவு (வீஸீtமீக்ஷீனீமீபீவீணீtமீ-றீமீஸ்மீறீ ஷ்ணீstமீ), கடைத்தரக் கழிவு (றீஷீஷ்-றீமீஸ்மீறீ ஷ்ணீstமீ) என்று மூன்று வகைக் கழிவுகள் உருவாகின்றன. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் பீப்பாய்கள் (200,000 கன அடி) கடைத்தர மற்றும் நடுத்தரக் கழிவுகளும், 50,000 பீப்பாய்கள் (10,000 கன அடி) உயர்தரக் கழிவுகளும் உருவாக்கப்படுகின்றன. அணுஉலைகளிலிருந்து வெளிவரும் எரிக்கப்பட்ட எரிகோல்கள் இவற்றில் அடங்காது.

அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனிய எரிகோல்கள் தொடங்கி பணியாளர்களின் கையுறைகள்,-காலணிகள் வரை எல்லாமே கதிர்வீச்சை வெளியிடுவதால் அல்லது கதிர்வீச்சுக்குள்ளாகி இருப்பதால், அவற்றை பிற திடக்கழிவுகள்போல கண்ட இடங்களில் வீசியெறிய முடியாது. அணுஉலைகளில் எரிக்கப்பட்ட எரிகோல்கள் போன்ற உயர்தரக் கழிவுகள் மிக அதிக கதிர்வீச்சுத்தன்மை கொண்டவையாக, மிகவும் ஆபத்தானவையாக இருப்பதால், அவற்றை மிக கவனமாகக் கையாண்டு, மிகவும் கண்ணும்கருத்துமாக போற்றிப் பாதுகாத்தாக வேண்டும்.

இந்தியாவில் அணுஉலைகளிலிருந்து வெளிவரும் திரவக்கழிவுகளைப் பெரும்பாலும் கடலுக்குள்ளேயே விட்டுவிடுகிறார்கள். திடக்கழிவுகளைப் பாதுகாக்க ‘தரைமட்டக் கழிவு மையம்’ (ழிமீணீக்ஷீ ஷிuக்ஷீயீணீநீமீ ஞிவீsஜீஷீsணீறீ திணீநீவீறீவீtவீமீs – ழிஷிஞிதி) நிறுவியிருக்கிறார்கள். டிராம்பே, தாராப்பூர், கல்பாக்கம், கோட்டா, நரோரா, கக்ரப்பார், கைகா எனும் ஏழு இடங்களில் காங்கிரீட் அல்லது கற்களால் கட்டப்பட்ட அகழிகளுக்குள் இம்மாதிரி அணுக்கழிவு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை எவ்வளவு அணுக்கழிவுகள் உருவாகியிருக்கின்றன என்பது குறித்து எந்தவிதமான அதிகாரப் பூர்வத் தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தில் இதுகுறித்த கேள்விகள் எழும்போதெல்லாம், இந்தியாவில் அணுஉலை எரிபொருள் மூடப்பட்ட படிநிலைகளைக் (நீறீஷீsமீபீ யீuமீறீ நீஹ்நீறீமீ) கொண்டிருப்பதால், மிகக் குறைந்த அளவுக் கழிவுகளே உருவாகின்றன என்கிற மழுப்பலான பதிலையே எப்போதும் சொல்லி வருகிறார்கள். இப்போதிருக்கிற இடைநிலை அணுக்கழிவுக் கிட்டங்கிகளிலேயே 30-40 ஆண்டுகளுக்கு அணுக்கழிவுகளை பாதுகாத்து வைத்துக்கொள்ளலாம் என்பதால், அணுக்கழிவு இந்தியாவுக்கு ஓர் உடனடிப் பிரச்சினை அல்ல என்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.

அணுக்கழிவுகளின் அடுத்தடுத்த நிலைகள்

ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணுஉலையில், ஆண்டொன்றுக்கு சராசரியாக 30,000 கிலோ எடையுள்ள எரிக்கப்பட்ட எரிகோல்கள் வெளிவரும். …

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.