கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு!

0

கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு!

டெல்லி துணை நிலை ஆளுநரின் அதிகார உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த புதன் கிழமை அளித்த தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்தின் விழுமியங்களை வலுப்படுத்தக்கூடியதும், அதனை பலகீனப்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசுக்கு பின்னடைவுமாகும். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு 2015-ம் ஆண்டு பதவியேற்றதைத் தொடர்ந்து உருவான அதிகார இழுபறி இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வரும் என்று நம்பலாம். டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தவிர மனுவில் கோரிய அனைத்தையும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது கெஜ்ரிவாலுக்கு மட்டுமல்ல கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி எனலாம். மாநிலப் பட்டியலில் உள்ள நிலம், காவல்துறை, சட்டம் ஒழுங்கு ஆகியவை நீங்கலாக, பொதுப் பட்டியலில் உள்ள துறைகள் அனைத்துக்கும் சட்டம் இயற்றும் அதிகாரமும், முடிவெடுக்கும் நிர்வாக அதிகாரமும் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உண்டு என்பதை தீர்ப்பு தெளிவாக பதிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி டெல்லி துணை நிலை ஆளுநரும் ஏனைய மாநில ஆளுநர்களை போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் உதவியுடனும் ஆலோசனையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும். ஆளுநரை உபயோகித்தோ இதர வழிகளிலோ மத்திய அரசு மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட முடியாது. முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கல்ல, மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.