கூண்டுக் கிளியின் கூக்குரல்!

0

கூண்டுக் கிளியின் கூக்குரல்!

ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ., ராகேஷ் அஸ்தானா, தேவேந்தர் குமார் உள்ளிட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்து தேவேந்தர் குமாரை கைது செய்தது. லஞ்சம், ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் ஐந்து கோடி ரூபாயை தன்னிடம் மிரட்டி பறித்ததாகவும் சதீஷ் சனா புகாரளித்துள்ளார். ராகேஷ் அஸ்தானாவும் தேவேந்திர குப்தாவும் சாதாரண பெயர்களாக இருந்திருந்தால் இந்த வழக்கும் பத்தோடு பதினொன்றாக கடந்து போயிருக்கும். ஆனால், இங்கு குற்றம் சாட்டப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர்! தேவேந்தர் குமார் சி.பி.ஐ.யின் டி.எஸ்.பி.! ராகேஷ் குமாரை கைது செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்பதால் அதற்கான கோரிக்கையை முன்வைத்தார் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா. ஆனால் அவரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

தொழிலதிபர் மொயின் குரைஷி தொடர்பான வழக்கில் தொழிலதிபர் சதீஷ் சனாவை சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்தர் குமார் பலமுறை அழைத்து (அக்டோபர், நவம்பர் 2017) விசாரணை நடத்தியுள்ளார். இதில் ஆஜராகி தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார் சதீஷ். ஆனால் தொடர்ந்து ஆஜராகுமாறு சி.பி.ஐ. தரப்பில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் இதனை தனது துபாய் பயணத்தின் போது (டிசம்பர் 2017) மனோஜ் பிரசாத் என்பவரிடம் கூறியுள்ளார். மனோஜ் பிரசாத்தை தனக்கு பத்தாண்டுகளாக தெரியும் என்கிறார் சதீஷ் சனா. இந்த பிரச்சனையில் இருந்து சதீஷை காப்பாற்றுவதாகக் கூறிய மனோஜ், தனது சகோதரனான சோமேஷ் பிரசாத்திடம் அறிமுகம் செய்துள்ளார்.

துபாயில் இருந்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் சோமேஷ் தொடர்பு கொண்டு பேசினார். சனாவிற்கு மேற்கொண்டு சம்மன்கள் அனுப்பாமல் இருக்கவும் வழக்கில் இருந்து விடுவிக்கவும் ஐந்து கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது. தொலைபேசியில் சோமேஷ்யிடம் பேசிய சி.பி.ஐ. அதிகாரி ராகேஷ் அஸ்தானா என்கிறார் சதீஷ்! மூன்று கோடி வரை பணம் கொடுத்துள்ள நிலையில் செப்டம்பர் 24 அன்று தனது குடும்பத்துடன் பிரான்ஸ் செல்லயிருந்த நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் சதீஷ். சதீஷ் குறித்து லுக் அவுட் சர்குலர் உள்ளதாக கூறிய அதிகாரிகள் அவரை மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறினர்.

சதீஷ் மீதம் கொடுக்க வேண்டிய இரண்டு கோடி ரூபாயை கொடுக்காததுதான் இதற்கு காரணம் என்று கூறிய மனோஜ், இதற்காக தங்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ராகேஷ் அஸ்தானா, தேவேந்தர் குமார், மனோஜ், சோமேஷ் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ.யில் புகாரளித்தார் சதீஷ் சனா. சி.பி.ஐ. அதிகாரிகளால் மனோஜ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அக்டோபர் 15 அன்று முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.