கெஜ்ரிவாலின் மகளை கற்பழிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பணம்!அதிர்ச்சியை ஏற்படுத்திய டிவிட்டர் பதிவு

0

2012 டில்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி ஒருவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலமான மூன்று ஆண்டுகளை அவர் பூர்த்தி செய்ததை தொடர்ந்து சீர்திருத்த பள்ளியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வந்தனர்.

இந்த எதிர்ப்பின் உச்சகட்டமாக மோடி ஆதரவாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கற்பழிப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரு இரு சக்கர வாகனமும் தான் வழங்குவதாகவும் அவரை கற்பழிப்பவர்கள் 17 – 18 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

@garrysingh954 என்ற ஐடி கொண்ட அவர் தனது பதிவில் டைம்ஸ் ஃஆப் இந்தியா பத்திரிகையையும் குறிப்பிட்டுள்ளார். காலை 6 மணிக்கு பதிவு செய்யப்பட்ட இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை அஞ்சி சிங் என்பவர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தன அழிவை தானே தேடிக்கொண்டதை அறிந்தவர் தன் பதிவை நீக்கவிட்டார். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இவரது டிவிட்டர் பதிவுகளில் இருந்து இவர் ஒரு மோடி ஆதரவாளர் என்றும் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் டொனல்ட் டிரம்ப்யை  ஆதரிப்பவர் என்பதும் தெரிய வருகிறது.

Comments are closed.