கெளரி லங்கேஷ் கொலையாளிகள் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறும் கர்நாடக உள்துறை அமைச்சர்

0

பிரபல எழுத்தாளரும் பகுத்தறிவுவாதியான கெளரி லங்கேஷ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவரது வீட்டில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டார் (செய்தி1, செய்தி2, ). இவரது கொலை தொடர்பான விசாரணையில் தற்போது பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது கொலையாளிகள் குறித்து தங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது என்றும் இந்த கொலையின் பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என்ற தகவல்களும் தங்களுக்கு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உறுதியான தகவல்கள் சேகரிக்கும் பணி தற்போது நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக சிறப்பு விசரணை படைக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் மேலும் பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. கொலையாளிகள் யார் என்று தற்போது தெரிந்தாலும் போதிய ஆதாரம் கிடைக்காத வரை அதுகுறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்க இயலாது என்று அவர் கூறியுள்ளார்

மேலும் கூறிய அவர் கொலைகாரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உறுதியான ஆதாரங்கள் வேண்டும். அது இல்லையென்றால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்

கெளரி லங்கெஷின் கொலையாளிகளை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி.கே.சிங் தலைமையில் 150 படையினருடன் நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.