கெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா

0

கெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா

பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷின் கொலை வழக்கில் கைது செயப்பட்டு தனது குற்றத்தை சிறப்பு புலனாய்வுத்துறையிடம் ஒப்புக்கொண்ட பரசுராம் வாக்மோர் மற்றும் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது.

அப்போது தனக்கு பரசுராம் வாக்மோர் யார் என்பதே தெரியாது என்று பிரமோத் முத்தாலிக் கூறினார். இந்நிலையில் தற்போது, ஸ்ரீராம் சேனா அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் கொலையாளி பரசுராம் வாமோரின் குடும்பத்திற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது.

இது தொடர்பான அந்த பதிவில், “தேசபக்தர்க்காக உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை, நீங்கள் உண்ணும் உணவின் ஒரு குவலத்தை பகிர்ந்துகொள்ள மாட்டீர்களா? பரசுராம் வாக்மோரின் குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. அவர்களுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

இத்துடன் வாக்மோரின் புகைப்படமும் ஒரு வங்கிக் கணக்கு எண்ணும் அந்தப்பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீராம் சேனா அமைப்பின் பெண்கள் பிரிவுத் தலைவியும் பாஜக யுவ மோர்ச்சா அமைப்பின் உறுப்பினருமான மஞ்சலேஷ்வரி தொனாஷ்யல் அவரது பேஸ்புக் பக்கத்தில் இன்னும் மோசமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “நாட்டில் இந்துத்வாவின் அஸ்திவாரத்தை அசைக்க இந்து எதிர்ப்பு சக்திகள் முயற்சித்தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பரசுராம் வாக்மோர் பிறப்பான்.” என்று பதிவு செய்துள்ளார்.

இவரின் இந்த பதிவு குறித்து பிரமோத் முத்தாலிக்கிடம் பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டதற்கு, மஞ்சலேஷ்வரி பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஸ்ரீராம் சேனாவை விட்டு விலக்கிவிட்டார் என்றும் அவர் தற்போது பாஜக வில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நிதி திரட்டல் நிதி நெருக்கடியால் வாடும் அந்த குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக என்று அவர் தெரிவித்துள்ளார்.. இது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை கண்டு ஸ்ரீராம் சேனா உறுப்பினர்கள் கருணைகொள்வதால் செய்யப்பட்டது என்றும் அது பரசுராம் வாக்மோருக்காக செய்யப்பட்டது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களை தீவிர இந்துத்வா சிந்தாந்தத்தை கையில் எடுக்க தூண்டியதற்காக அவர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தால் என்ன செய்வீர்கள் என்று பத்த்ரிக்கையாளர்கள் கேட்டதற்கு, அது போன்ற எந்த ஒரு வழக்கையும் சந்திக்க தான் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் தனக்கு நேரடியாக எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.