பிரபல பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை K.T.நவீன் குமார் என்பவரை தங்கள் காவலில் எடுத்துள்ளது. இவரது தொலைபேசி அழைப்பு தகவல்களில் அடிப்படையில் இவர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய பங்காற்றியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஹிந்து யுவ சேனா என்ற அமைப்பை துவங்கிய K.T.நவீன் குமாரை சட்டவிரோதமாக துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த காரணத்தால் கர்நாடக குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்திருந்தது..
மத்திய குற்றவியல் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் பேரில் பெங்களுரு காவல்துறை, சிக்மகளுறு மாவட்டத்தை சேர்ந்த K.T.நவீன் குமார் என்பவரை கைது செய்துள்ளது. இவரிடம் இருந்து காவல்துறை .32 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் ஐந்திணை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கெளரி லங்கேஷ் கொலையில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் இரண்டும் பால துப்பாக்கிகளில் ஒன்றிற்கு பதிலாக மாற்றி பயன்படுத்தத்தக்கது என்று வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.