கேம்பஸ் ஃப்ரண்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு

0

கேம்பஸ் ஃப்ரண்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுக்குழு 27.01.2019 அன்று மதுரையில் ‘சகிப்பின்மைக்கு விடைகொடுப்போம், ஃபாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்‘ என்ற முழக்கத்தோடு மாநில தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவை தேசிய துணைத்தலைவர் அப்துர் ரஹீம் துவக்கிவைத்தார். இதன் பின்னர் ஆண்டறிக்கையை மாநில பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ். இஸ்மாயில் மற்றும் தமிழ் மாநில குழு உறுப்பினர் அமீர் பாஷா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இதன் பின்னர் 2019 – 2020ஆம் ஆண்டிற்கான புதிய தமிழ் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள்..

மாநில தலைவர்: அப்துல் ரஹ்மான் Bsc.LLB, மாநில துணைத் தலைவர்கள்: கஸ்ஸாலி மீரான் DECE, பாத்திமா பர்வீன் M.Sc., மாநில பொதுச் செயலாளர்: அஷ்ரப் M.sc., மாநில செயலாளர்கள்: செய்யது சபீக் B.Tech, முஹம்மது B.E, மாநில பொருளாளர் : ரியாஸ் அஹமது DCE, BE, மாநில குழு உறுப்பினர்கள் : முஸ்தபா B.E, அப்பாஸ் B.A., LLB, தர்வேஸ் B.S.W., பைசல் B.com.,MBA, ஷேக் ஒலி M.Com, சாபிரா B.A, நபிஸா B.A., LLB மற்றும் சுல்தான் M.E.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து மாணவ சக்திகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும், ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் மாநில அரசு தலையிட்டு சுமூக தீர்வை காண வேண்டும், அரசு பள்ளிகளில் அடிப்படை கல்வி தரத்தை உயர்த்த வேண்டும், பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.