கேம்பஸ் ஃப்ரண்ட் போராட்டத்தின் எதிரொலி: மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வர அனுமதி

0

மங்களூரு: ஸ்ரீனிவாசா மருந்தியல் கல்லூரியில் B.Pharm பட்டம் பயிலும் முதல் வருட முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறை, நூலகம், அலுவகலம் மற்றும் தேர்வு அறைக்குள் வருவதை கல்லூரி நிர்வாகம் தடை செய்திருந்தது. மேலும் மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட்கள் அணிவதையும் அந்தக் கல்லூரி தடை செய்திருந்தது.

கடந்த வியாழக் கிழமை ஹிஜாப் அணிந்து வந்த மாணவி ஒருவரிடம் கல்லூரி ஒழுக்க கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் அவர் ஹிஜாப் அணிந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கல்லூரி நிர்வாகத்தை அணுகி மாணவிகள் தங்கள் ஹிஜாபை அணிந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் அந்த கல்லூரி நிர்வாகத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாச ராவ்வையும் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து கல்லூரிக்கு ஹிஜாப் அணித்து வரும் மாணவிகள் மீது எத்தகைய கட்டுப்பாடும் இனி விதிக்கப்பட மாட்டாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.