கேரளத்தில் ஆர்எஸ்எஸ் ஊழியரின் வெடிகுண்டு தொழிற்சாலை: குண்டு தயாரிப்பின் போது சேதம்?

0

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர் ரகு என்பவற்றின் கட்டிடம் ஒன்று சமீபத்தில் குண்டு வெடிப்பில் சேதமடைந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையிட்டதில் ரகுவின் வீட்டில் அரைகிலோ வெடிபொருள் இருந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த கட்டிடத்தை ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ரகு வெடிபொருள் தயாரிக்க பயன்படுத்தியிருக்கக் கூடும் என்றும் வெடிபொருள் தயாரிப்பின் போது எதிர்பாராத விதமாக அது வெடித்திருக்கக் கூடும் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த கட்டிடத்தின் உரிமையாளர் ரகு மற்றும் அவரது தந்தை தலைமறைவாகியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது போன்று வெடி குண்டு தயாரிப்பதும் தயாரிப்பின் போது அவை வெடிப்பதும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினருக்கு புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.