கேரளாவில் இந்தியாவின் முதல் சைகை மொழி சொற்பொழிவு நடைபெறும் பள்ளிவாசல்

0

இந்தியாவில் முதன் முறையாக கேள்வித்திறன் அற்றோருக்கான ஜும்மா பள்ளிவாசல் கேரள மாநிலம் மலப்புரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரத்தின் புல்லிக்கள் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பள்ளிவாசலில் ஜும்மா உறை கேள்வித் திறன் அற்றோரும் புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழியிலும் எடுத்துக் கூறப்படும். 500  பேர் இருந்து சொற்பொழிவுகளை கேட்கும் வசதி கொண்ட இந்த பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு திரையில் சைகை மொழி பிரசங்கங்கள் காண்பிக்கப்படும். இந்த பள்ளிவாசலில் இந்த ஏற்பாடுகளுடன் சக்கர நாற்காலிகளில் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

பிற உடல் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு கூட ஜும்மா உரைகளை கேட்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் கேள்வித் திரனற்றோர் இதில் தனித்து விடப்படுகின்றனர். இந்த பள்ளிவாசல் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று Ability Foundation அமைப்பின் தலைவர் முஸ்தஃபா மதானி தெரிவித்துள்ளார்.

தங்களது இந்த பள்ளிவாசல் குறித்த சிந்தனையானது, மதானி நடத்தும் மாற்றுத் திரனாளிகளுக்கான பள்ளியில் பல கேள்வித் திறனற்ற மாணவர்கள் ஜும்மா தொழுகையில் பங்கு பெறுவதில்லை என்று தெரியவந்ததும் ஏற்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

கேரளா ஜம்மியத்துல் உலமா தலைவர் சி.பி.உமர் சுல்லாமி இந்த பள்ளிவாசலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் பங்குபெற்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் துவக்கப்பட்ட இந்த பள்ளிவாசலின் கட்டுமானத்திற்கு 75 லட்ச ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது.

Comments are closed.