கேரளாவில் சுயேட்சை வேட்பாளர் நசீர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

0

கேரள மாநிலம் வடகரா நாடாளுமன்ற தொகுதியில் சி.ஓ.டி. நசீர் என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் நசீர் அவரது இரு சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே அடையாளம் தெரியாமல் வந்த 2 மர்மநபர்கள் நசீரை, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில், அவருக்கு தலை மற்றும் அடி வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோழிக்கோட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நசீர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 2015ஆம் ஆண்டு விலகினார். அதனையடுத்து பி.ஜெயராஜனுக்கு எதிராக போட்டியிட தனது முடிவை தொடர்ந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் கூட வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் நசீர் தாக்கப்பட்டார். மேலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய பிறகு நசீர் மீது 3 தாக்குதல்கள் தடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.