கேரளா ஃபைசல் கொலை வழக்கு: ஆர்எஸ்எஸ் தலைவர் கைது

0

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உயர்ஜாதி இந்து ஒருவர் தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததால் அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர்.(பார்க்க செய்தி)

இந்த கொலை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் திரூர் தாலுகாவின் ஆர்எஸ்எஸ் சாஹா ஒருங்கிணைப்பாளர் மடத்தில் நாராயணன் (வயது 47) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த ஃபைஸல் கொலை வழக்கில் 14 ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த கொலையின் முக்கிய சூத்திரதாரியாக நாராயணனை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. 1998 ஆம் வருடம் ஐயப்பன் என்ற கோவில் பூசாரி இஸ்லாத்தை ஏற்றதால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கிலும் நாராயாணன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். நாராயணன் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்திருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்கு சென்ற இவ்வழக்கில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

பின்னர் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டிற்கு சென்ற இந்த வழக்கில் இவர்களை கடந்த வருடம் ஜூலை மாதம் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். தற்போது நடைபெற்ற ஃபைசலின் கொலையை தன்னை உச்ச நீதிமன்றம் வெளியிட்டதற்கு நான்கு மாதம் கழித்து நாராயணன் திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

ஃபைசல் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அவர் பணியாற்றி வந்த மத்திய கிழக்கு நாடுக்கு செல்வதற்கு முன் கொலை செய்யப்பட்டார்.

 

Comments are closed.