கேரளா: ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி வீட்டில் வெடிகுண்டு!

0

கேரளா: ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி வீட்டில் வெடிகுண்டு!

கரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நடுவில் என்கிற ஊரில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளரான எம். ஷிபூவின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளே வெடித்தன என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ஷிபுவின் மகன் உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 7 வயதான கோகுல் மற்றும் ஷிபுவின் உறவினர் மகன் 12 வயதான கஜின்ராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளுக்கும் இந்த குண்டவெடிப்பின் காரணமாக தீ காயம் ஏற்பட்டுள்ளது. ஷிபிவின் மீது ஏற்கெனவே பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. முந்தைய வழக்குகளில் கைதாகாமல் இருந்த ஷிபு தற்போது தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டை சோதனையிட்டனர். இந்த சோதனையில் 3 கிலோ அலுமினியம் பவுடர், 600 கிராம் துப்பாக்கி பவுடர் உட்பட பல குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர ஏழு வாள்கள், கோடரி, இரும்பு பைப் ஆகியவையும் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

மகாராஷ்டிரா காவல்துறை அதன் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி சம்மந்தமில்லாத குற்றச்சாட்டின் பேரில் சிறையில் ஐந்து இஸ்லாமியர்களை சித்திரவதை செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநில மனித உரிமைகள் ஆணையம் (எம்.எஸ்.ஹைச்.ஆர்.சி), மாநில கூடுதல் தலைமைச் செயலாளர், பாதிக்கப்பட்ட இந்த ஐவருக்கும் தலா ரூ. 2 லட்சம் இழப்பீட்டு தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதில் தொடர்புடைய காவல்துறையினர் மீது துறை சார்ந்த விசாரணை நடத்துமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ஹோலி பண்டிகையின் போது, பள்ளிவாசலில் இருந்து தொழுகையை முடித்து விட்டு வெளியே வரும் இஸ்லாமியர்கள் மீது சிலர் கலர் பவுடர்களை தூவினர். மேலும் பள்ளிவாசலுக்கு அருகே வகுப்புவாத வன்முறையில் ஈடுபட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த இர்பான் ரஹ்மான் கான் என்பவர் புகாரளித்தார்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Leave A Reply