கேரளா: சிறைக்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரை கொன்ற ஆர்.ஏஸ்.எஸ்-பாஜகவினருக்கு ஆயுள் தண்டனை

0

கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் 2004ஆம் ஆண்டு வடகார நாதபுரத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் K.P. ரவீந்ரன் மீது ஆர்.ஏஸ்.எஸ்-பாஜகவினர் அரசியல் பகைக் காரணமாக தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த ரவீந்திரனை பரியாரம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர்.

மேலும் இவ்வழக்கில் 31 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், இதில் ஒன்பது பேரை குற்றவாளியாகக் கண்டறிந்த நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மீதமுள்ளவர்களை விடுவித்தது.

இந்த வழக்கில்  சிறை அதிகாரிகள் மற்றும் பிற கைதிகள் சாட்சிகளாக இருந்தனர்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.