கேரளா: தலித் ஆர்வலர், ஃபாசிச எதிர்பாளர் என்ற போர்வையில் ஃபாசிசவாதிகள்?

0

கேரளாவில் லவ் ஜிஹாத் ஹெல்ப்லைன் என்கிற பெயரில் ஃபேஸ்புக் ரகசிய குழு ஒன்று செயல்பட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த குழுமத்தில் கேரளா பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் உட்பட பலரும் இணைந்திருப்பதும் அத்துடன் பிரபல தலித் ஆர்வலர் தன்யா ராமன் உட்பட கடந்த வருடம் பாசிச எதிர்ப்பு கூட்டங்களில் பங்கெடுத்த பிரபல இசை அமைப்பாளர் ஒருவரும் உறுப்பினராக உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் இக்குழுவில் தவறுதலாக ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அல்லாதவர்கள் சேர்க்கப்பட்டது மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்கள் அந்த குழுமத்தில் நடைபெற்ற உரையாடல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த குழுமத்தின் முக்கிய நோக்கம் இந்து முஸ்லிம் கலப்பு திருமணம் மற்றும் காதல் குறித்த தகவல்களை பகிர்வதும் அதனை தடுப்பது குறித்து ஆலோசிப்பதும் என்று தெரிய வந்துள்ளது. இதில் பெங்களூருவிற்கு சென்ற காதல் ஜோடி ஒன்று குறித்து தகவல்களை பெங்களுரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கு உதவும் காவல்துறை நண்பர்களையும் இதில் இணைக்குமாறும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுமத்தில் பகிரப்பட்ட தகவல்களில் ஒன்று, “இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் இரண்டு இந்துப் பெண்களுடன் தலைச்சேரியில் இருந்து பெங்களுருவிற்கு செல்கிறார்கள். அவர்களை தாடி வைத்த ஒரு கூட்டம் அனுப்பி வைத்தது. கைகளில் கயிறுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்ட அவர்கள் அங்கிருந்து உடனடியாக கிளம்பி விட்டனர். அந்த பேருந்தின் எண், நிறம் மற்றும் நிரவனப் பெயர் உள்ளிட்ட தகவல்களை பகிரப்பட்டுள்ளது. பெங்களுரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த குழுமத்தில் தலித் ஆர்வலர் தன்யா ராமன் இக்குழும உறுப்பினர்களின் நடவடிக்கைகளை போற்றும் விதத்தில் லைக் கொடுத்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியான இந்த லவ் ஜிஹாத் தகவல்களுடன் கேரளா மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குள் நடக்கும் உள்சன்டையும் வெளிப்பட்டுள்ளது. மேலும் அந்த குழுமத்தில் பல ஒற்றர்கள் இருப்பதாகவும் அதனால் இன்னும் பாதுகாப்பான குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்துக்களை பரிமாறியுள்ளனர்.

லவ் ஜிஹாத் என்ற ஒரு காரணத்திற்காக இத்தகைய ஒரு குழுமம் ஒன்றை சங்க்பரிவார மைப்புகள் உருவாக்கி செயல்படுத்தி வருவார்களேயானால் இவர்கள் இவர் இதுபோல் வேறு என்னென்ன காரணங்களுக்காக குழுமங்களை ஏற்ப்படுத்தி தீய விதைகளை தூவுகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த குழுமம் குறித்தும் அதில் பங்கேடுத்துள்ளவர்கள் குறித்தும் தகவல் வெளியானதும், தலித் ஆர்வலர் தன்யா ராமன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் இந்தக் குழுமம் குறித்தோ அல்லது இக்குழுமத்தின்  செயல்பாடுகள் குறித்தோ எதுவும் தெரிவிக்காமல் தனது பெயரை கெடுக்கும் வகையில் சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரளித்துள்ளர்.

இந்நிலையில் அந்த குழுமத்தில் அவரது பங்களிப்பை உறுதி செய்யும் விதத்திலும் அதில் காணப்பட்ட தன்யா ராமன் எனும் நபர் இவர் தான் என்று நிரூபிக்கும் வகையிலும் அக்குழுமத்தில் பங்கு பெற்ற நபரின் ஃபேஸ்புக் முகவரியையும் இந்த தகவலை வெளியிட்டவர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். வெளியுலகத்திற்கு தன்னை ஆதிக்க சாதி கட்டமைப்பை எதிர்க்கும் ஒருவராக காட்டிக்கொள்ளும் நபர்களும் தங்களை ஃபாசிச எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொள்ளும் நபர்களும் சங்க்பரிவாரத்துடன் கள்ள உறவை வைத்துள்ளார்கள் என்பது  இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

b0217-lovejihad5

செய்தி ஆதாரம்:அல்ட்நியுஸ் தளம்

Comments are closed.