கேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன?

0

கேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன?

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பிரபலமான மகாராஜாஸ் கல்லூரியில் கடந்த ஜூலை 1-ம் தேதி இந்திய மாணவர் சங்க (எஸ்.எஃப்.ஐ.) மாணவர்களுக்கும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.ஐ.) மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய மாணவர் சங்கத்தைச் (எஸ்.எஃப்.ஐ.) சேர்ந்த அபிமன்யூ (வயது 20) என்ற மாணவர் படுகாயமடைந்து பின்னர் மரணமடைந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பின் உறுப்பினர்களை கைது செய்ததுடன் இதில் தொடர்புடைய இதர நபர்களைத் தேடி வருவதாக காவல்துறை தெரிவித்தது.

ஆனால், இந்த படுகொலை மூலம் அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் கேரளாவை ஆட்சி செய்யும் இடதுசாரி அரசு தமது மாணவர் அமைப்பின் வன்முறை கலாச்சாரத்தை மூடிமறைப்பதற்காக அதிகார பலத்தின் மூலம் இச்சம்பவத்தோடு எவ்வகையிலும் தொடர்பு இல்லாத பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) மற்றும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) மீது பழி சாட்டி அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களை மாநிலம் முழுவதும் அநியாயமாக கைது செய்யும் படலத்தை துவக்கியது. பி.எ.ஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ.யின் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன.

மாணவர் அமைப்புகளுக்கு இடையே நடந்த மோதலை இஸ்லாமிய பயங்கரவாதமாக இடதுசாரிகளும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் சித்தரித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள அரசியல் களத்தின் உண்மை நிலை தெரியாமல் தமிழகத்தில் இயங்கும் சில அமைப்புகளும் தனி நபர்களும் சமூக வலைதளங்களில் பிழையான மனப்பதிவுகளை கருத்துக்களாக வெளியிட்டு வருகின்றனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.