கேரளா மாணவரை மிரட்டும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க

0

கேரளாவில் பா.ஜ.க வின் தேசிய கவுன்சில் சந்திப்பு கண்டனத வியாழன் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. தங்களது இந்த கூட்டத்தில், ஸ்வச் பாரத் என்று சுத்தத்தை வலியுறித்தி அதற்காக வரியும் வசூலிக்கும் பா.ஜ.க தங்களது கூட்டத்தில் சேர்த்த குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்றுள்ளனர்.

ஞாயிறு காலை கால்நடைப் பயிற்ச்சிக்காக கடற்கரை சென்ற ஷமீர் காசிம் மூன்று நாள் நடைபெற்ற குறிப்பாக மோடி பங்குபெற்ற பா.ஜ.க கூட்டத்தினால் குவிந்துள்ள குப்பைகளை கண்டுள்ளார். ஊடகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ஷமீர் இந்த குப்பைகளை படம் பிடித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “ஸ்வச் பாரத் திட்டம் பல விளம்பரங்களுக்கு நடுவே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடியும் அவரது ஆதரவாளர்களும் வருகை புரிந்த கோழிக்கோடு கடற்கரையின் நிலையை பார்க்கலாம். இது சாதாரண குப்பைகள் அல்ல. பிளாஸ்டிக் குப்பைகள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பதிவாகி ஒரே நாளில் கோழிக்கோடு கடற்கரை பா.ஜ.க உறுப்பினர்களாலும் சுற்றுலாதுரையினராலும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் செவ்வாய் கிழமை பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஷமீரின் கிராமமான நிலாம்பூரில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் சமீரின் கை கால்களை வெட்டிவிடப் போவதாக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த போராட்டம் நடைபெற்ற போது கல்லூரியில் இருந்த ஷமீர் தனது குடும்பத்தினர் இந்த கோஷங்களை கேட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சமீர் கூறுகையில், “போராட்டக்காரர்களின் கோஷங்கள் என்னை நோக்கி இருந்ததாக என் தந்தை என்னிடம் கூறினார். “உன் தாயின் முகத்தை பார்க்காமலே நீ இறந்துவிடுவாய்” என்பது அவர்கள் எழுப்பிய கோஷங்களில் ஒன்று.” என்று கூறியுள்ளார்.

ஆனால் இது குறித்து காவல்துறையில் தான் புகாரளிக்கப் போவதில்லை என்று ஷமீர் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு ஊடகத்துறை மாணவன் என்றும் இந்த வீடியோவை பகிர்வதன் மூலம் தான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்றும் இது குறித்து காவல்துறையில் புகாரளிப்பதால் தனக்குத்தான் மேலும் பிரச்சனைகள், குறிப்பாக தனது கல்விக்கு பிரச்சனை என்று கூறியுள்ளார்.

இதுவரை 2 லட்சம் முறை பார்வையிடப்பட்ட சமீரின் வீடியோ குறித்து பா.ஜ.க வை சேர்ந்தவர் ஒருவர் கூறுகையில், அந்த இடம் பா.ஜ.க கூட்டம் முடிந்த மாலையே சுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்றும் சமீர் இந்த வீடியோவை மதியம் பதிவு செய்துள்ளார். என்று கூறியுள்ளார்.

Comments are closed.