கேரளா ரியாஸ் மெளலவி கொலை வழக்கு: UAPA சட்டம் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி.

0

கேரள மாநிலம் மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த ரியாஸ் மெளவியின் கொலை வழக்கில் UAPA சட்டம் சேர்க்கப்படாதது குறித்து அவரது மனைவி கேள்வி எழுப்பி  உயர் நீதிமன்றத்தில் மனு அளித்ததன் விளைவாக அவ்வழக்கின் விசாரசனையை கேரள உயர் நீதிமன்றம் தடைசெய்துள்ளது.

இவ்வழக்கு விசாரனயை காசர்கோடு விசாரணை நீதிமன்றம் நடத்த இருந்த நிலையில் ரியாஸ் மெளவியின் மனைவி சாதியா இவ்வழக்கில் UAPA சட்டம் சேர்க்கப்படாதது தனக்கு நீதியை மறுப்பது என்றும் இது சமூகத்திற்கு தவறான செய்தியை தெரிவிக்கின்றது என்றும் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனையடுத்து கேரள உயர் நீதிமன்றம் இது தீர்க்கப்படும் வரை இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்துள்ளது.

சாதியா தனது மனுவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடப்பு உறுப்பினர்கள் என்றும் இந்த கொலையின் இறுதி அறிக்கையில், காவல்துறை இவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 449, 302, 153A, 295, 201, 34, ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட அந்த தினத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களை கொலை செய்ய வாய்ப்பு தேடி பல இடங்களுக்கு சென்றுள்ளனர் என்றும் இறுதியில் அவர்கள் மொஹியுதீன் ஜும்மா பள்ளிவாசலுக்குச் சென்று தனது கணவரை கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், “குற்றம் சாட்டப்பட்டவர்களின் இந்த செயல் ஒரு பயங்கரவாத செயல். இவர்களின் இந்த செயல் 1967 UAPA சட்ட வரையைக்குள் அடங்குகிறது. இவர்களின் இந்த செயல் மூலம் முஸ்லிம் சமூகத்தில் அச்சத்தை விதைக்க வேண்டும் என்கிற அவர்களின் எண்ணம் தெளிவாகிறது. அவர்கள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பயங்கர காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். அதனால் இவர்களின் இந்த செயல் UAPA  பிரிவு 15  இன் கீழ் வருகிறது, பிரிவு 16  இன் கீழ் இது தண்டிக்கப்படக்கூடியது.“ என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு அனைத்து ஆதாரங்களும் இருந்தும் காவல்துறை UAPA சட்டத்தை இவ்வழக்கில் சேர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் தனது கணவரின் கொலை ஒரு தனிப்பட்ட செயல் அல்ல என்றும் அப்பகுதியை சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதிகளில் இது நான்காவது சம்பவம் என்றும் சாதியா தனது மனுவில் தெரிவித்துள்ளார். 2008 இல் முஹம்மத் என்றவரும், 2011 இல் 24  வயது ரிஷாத் என்பவரும், 2013 இல் 19 வயது ஸாபித் என்றவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 20 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் குண்டர்களால் பழைய சூரியில் உள்ள மொஹியுதீன் ஜும்மா பள்ளிவாசலில் வைத்து ரியாஸ் மெளலவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக கேரளா காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஜேஷ் என்ற அப்பு, அகில் என்ற அகிலேஷ், மற்றும் நிதின் ஆகியோரை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தது. இவர்கள் மீது விசாரணை நீதிமன்றத்தில் குற்றபப்த்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.(பார்க்க செய்தி)

இவ்வழக்கில் UAPA பிரவு 16  சேர்க்குமாறு சாதியா செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு அளித்திருந்தார். அவரது அந்த மனுவை அந்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனையடுத்து அவர் உயர் நீதிமன்ற உதவியை நாடினார். உயர் நீதிமன்றத்தில் சாதியாவிற்காக வழக்கறிஞர்கள் P.மார்டின் ஜோஸ், M.A. முஹம்மத் சிராஜ், ஜிதேஷ் R, பிரிசித் P, தாமஸ் P  குருவிலா, அஜெய் பெண் ஜோஸ் மற்றும் மஞ்சுநாத் மேனன் ஆகியோர் ஆஜர் ஆகினர்.

Comments are closed.