கேரளா CPI(M) கட்சி தொண்டர் கொலை வழக்கில் 13 ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு

0

2008, ஏப்ரல் 1 ஆம் தேதி கேரள மாநிலம் கைதாமுக்கு பகுதியில் விஷ்ணு என்பவர் அப்பகுதி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்தவர்கள் இரும்பு கம்பி, வாள் முதலிய ஆயுதங்களால் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக முதலில் 11 ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை காவல்துறை கைது செய்திருந்தது. மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக எம்.ஜி.கல்லூரியின் முன்னாள் தலைவர் டி.சந்தோஷ், ககொட்டா மனோஜ், ஆர்.ரெஞ்சித், பேட்டா போஸ், ஆகியோரை காவல்துறை அடையலாம் கண்டது.

தற்போது இந்த கொலை வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி  டி.கே.உன்னிமோல் இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார்.

இவர்கள் மீது கொலை சதித்திட்டம் தீட்டுதல், மற்றும் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Comments are closed.