கேரள செய்தித் தொகுப்பாளருக்கு 2000 மிரட்டல் / ஆபாச அழைப்பு விடுத்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க உறுப்பினர்கள்

0

பிப்ரவரி 26 ஆம் தேதி பிரபல மலையாள செய்தி சானலில் மஹிசாசூர் ஜெயந்தி கொண்டாவது குறித்த விவாதம் ஒன்று நடந்தது. அதனை சிந்து சூர்யகுமார் நடுவராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அன்றிலிருந்து அவருக்கு ஏறத்தாள 2000த்துக்கும் மேல் ஆபாச அழைப்புகளும் மிரட்டல் அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
தொலைபேசியில் அழைத்தவர்கள் பெரும்பாலும் இந்துத்வ குழுக்களை சேர்ந்தவர்கள் என்றும் நிகழ்ச்சியில் சிந்து சூர்யகுமார் துர்காவை பாலியல் தொழிலாளி என்று கூறியதாக குற்றம் சாட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேல் இவ்வாறு குற்றச்சாட்டு இருக்க உண்மையில் இப்படியான வார்த்தைகளை கூரியவர் பா.ஜ.க வின் மாநில செயலாளர் வி.வி.ராஜேஷ் ஆவார். அவர் JNU வளாகத்தில் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு நோட்டீஸ் இல் இருந்து அந்த வாசகத்தை படித்துக்காட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிந்து சூர்யகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரம் நகர காவல்துறை கமிஷனர் ஜி.ஸ்பர்ஜன் குமார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., ஸ்ரீ ராம் சேனா போன்ற இந்துத்வ இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த ஐந்து பேரில் ஒருவன் சூர்யகுமாரின் தொலைபேசி எண்ணை சங்க த்வாணி என்ற வாட்ஸப் குழுமத்தில் இருந்து தான் பெற்றதாக கூறியுள்ளான்.

தனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்து கூறிய சூர்ய குமார் “ஒவ்வொரு நிமிடமும் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அனைவரும் நான் துர்காவை பாலியல் தொழிலாளி என்று கூறியதாக குற்றம் சாட்டுகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அழைப்பு விடுக்கும் நபர்கள் அவரை விபச்சாரி என்று அழைத்ததாகவும் மேலும் சிலர் அவரை மிரட்டியதாகவும், இன்னும் சிலருக்கு எதற்காக திட்டுகின்றோம் என்று தெரியாமலே திட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து பா.ஜ.க.வின் ராஜேஷ் எந்த விதமான விசாரணைக்கும் அவர் ஒத்துழைப்பதாக கூறிய போதும் அவரது கட்சி தலைமை இது போன்ற புரளிகளை தடுக்க எந்த முயர்ச்சியும் எடுக்கவில்ல. மேலும் பல பா.ஜ.க தலைவர்கள் இது குறித்த கேள்விகளை தவிர்த்து வருகின்றனர்.

இது போன்ற அழைப்புகளால் சூர்யா குமார் பணிபுரியும் ஏசியாநெட் நிறுவனத்தின் அன்றாட நிகழ்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளா மாநில பத்திரிகையாளர் சங்கம் திங்கள் அன்று இதற்கு எதிரான போராட்டத்தையும் கேரளா தலைமைச்செயலகம் நோக்கிய பேரணி ஒன்றையும் நடத்தியது.

Comments are closed.