கேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு

0

கேரளாவில்  கடந்த சில தினங்களுக்கு முன்  ஆற்றிங்கல் தொகுதி பாஜக வேட்பாளரான ஆதரித்து மாநில பாஜக  தலைவர் ஶ்ரீதரன் பிள்ளை பேசினார். அப்போது  அவர் முஸ்லிம்களை அவமதிக்கும்  வகையில் கருத்துகளை பேசியயுள்ளார். இதையடுத்து ஶ்ரீதரன் பிள்ளைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சிபிஎம் கட்சி தலைவர் சிவன்குட்டி  கேரள  உயர் நீதிமன்றத்திலும், மாநில தேர்தல்  ஆணையத்திலும், ஆற்றிங்கல் போலீசிலும் புகார் அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் கேட்டு கேரள தலைமை தேர்தல் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியது. இதைதொடர்ந்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று விளக்கம் அளித்தார்.

அதில், ஶ்ரீதரன் பிள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். இந்த  நிலையில் ஆற்றிங்கல் போலீசார் சிவன்குட்டி அளித்த புகாரின்படி ஶ்ரீதரன் பிள்ளை  மீது  மத மோதலை தூண்டுதல்,  பிறமதத்தினரை புண்படுத்துதல் என ஜாமீனில்  வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Comments are closed.