கேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்!

0

கேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்!

பாசிசத்தின் முதல் இரை முஸ்லிம்களே! அவர்களுக்கு ஆதரவாக நிற்பதே நேர்மையான நிலைப்பாடு! என்று பிரகடனப்படுத்தி 2015ல் இஸ்லாத்தை தழுவிய எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான நஜ்மல் பாபு (டி.என். ஜாய்) கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி மரணமடைந்தார்.

கேரளாவில் 1970 களில் நக்ஸலைட் இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த டி.என். ஜாய் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் சிறையில் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளானவர். சிறையிலிருந்து வெளி வந்த பிறகு நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான போராட்டங்களிலும், மனித உரிமை தொடர்பான பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். காவல்துறையின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோழனாக இருந்தார். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்தியாவில் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகமான முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான, இந்திய பாரம்பரியத்தின் நினைவுச்சின்னமான பாபரி மஸ்ஜித் இந்துத்துவ சக்திகளால் இடிக்கப்பட்டபோது நீதிக்காக குரல் கொடுத்தார். அனைத்து அரசு எந்திரங்களின் உதவியோடு நடத்தப்பட்ட குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை டி.என்.ஜாயை உலுக்கியது. தலித்துகளும், பழங்குடியினரும் ஒடுக்கப்படும் அதேவேளையில் முஸ்லிம்கள் தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு இதர சமூகங்களிலிருந்து அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.ஒருபுறம் முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புக் கலவரங்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறும்போது, இன்னொரு புறம் அவர்கள் தடா,பொடா, யு.ஏ.பி.ஏ முதலான கறுப்புச் சட்டங்களின் பெயரால் சிறையில் அடைக்கப்பட்டனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Goto Index

Comments are closed.