கேரள மருத்துவக் கல்லூரி ஊழலில் சிக்கிய பாஜக தலைவர்கள்

0

கேரள பாஜகவில் மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக லஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட உள்விசாரணை குறித்த செய்திகள் வெளியானதில் பல பாஜக அரசியல்வாதிகள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் அடங்கிய மாபெரும் ஊழல் வெளியாகியுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு அங்கிகாரம் பெறுவதற்காக பாஜக தலைவர் ஒருவர் லஞ்சம் வழங்கியது தொடர்பாக KP ஸ்ரீஷன் மற்றும் AK நஷீர் தலைமையிலான குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த அறிக்கையை கட்சியில் உள்ள சிலரை தற்போது கசியவிட்டுள்ளனர். இந்த கசிவை தொடர்ந்து கேரளா பாஜக R.S.வினோத் என்ற பாஜக கூட்டுறவு பிரிவு ஒருங்கினைப்பாளரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக இவர் ஒருவர் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டாலும் வெளியான அறிக்கையின் படி இந்த ஊழலில் R.S.வினோத் ஒரு பகுதி தான் என்று கூறப்படுகிறது .

இந்த விசாரணைக்குழு ஆறு நபர்களிடம் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதில் SR EDUCATIONAL AND CHARITABLE TRUST தலைவர் R.ஷாஜி, R.S.வினோத், சதீஷ் நாயர், கண்ணதாஸ், மற்றும் ராகேஷ் சிவராமன் ஆகியோர் என்று கூறப்படுகிறது.

இதில் சில மாதங்களுக்கு முன் R.ஷாஜி கேரள பாஜகவிடம் தான் R.S.வினோத்திடம் ரூபாய் 5.6 கோடியினை தனது மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மெடிகல் கவுன்சில் அங்கீகாரம் தருவதற்காக என்று லஞ்சம் கொடுத்ததாக புகாரளித்துள்ளார். இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு மே மாதம் இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விசரனியின் போது ஷாஜி தனது வாக்குமூலத்தில், தனது மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் R.S.வினோத்தை நாடி அவரது செல்வாக்கை பயன்படுத்தி அங்கீகாரம் பெருத்தருமாறு கோரியதாகவும் அதற்கு டில்லியை மையமாகக் கொண்ட இடைத்தரகர் சதீஷ்  மூலம் இதனை செய்துத் தருவதாக RS வினோத் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் ராகேஷ் சிவராமன் என்ற ஒருவர் பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரனின் உதவியாளர் என்று அறிமுகப்படுத்தப் பட்டதாகவும் அவர் தான் தன்னை சதீஷ் நாயரிடம் அறிமுகப் படுத்தியதகாவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அங்கீகாரம் பெற்று தருவதற்காக தன்னிடம் வினோத் 17 கோடிகளை கேட்டதாகவும் இறுதியாக மொத்த தொகையில் ஒரு பகுதியான 5.6 கோடிகளை வினோத்திடம் தான் வழங்கியதாகவும் ஷாஜி தெரிவித்துள்ளார். இத்துடன் ராகேஷ் சிவராமன் மற்றும் கண்ணதாஸ் ஆகியோர் கூடுதலாக 15 லட்சங்களை தன்னிடம் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வினோத் தன்னுடைய வாக்குமூலத்தில் இந்த பணம் ஹவாலா பரிவர்தகர் மூலமாக கொச்சிக்கு அருகில் வைத்து கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். அனால் இந்த பணத்தை செலுத்திய பின்னரும் ஷாஜிக்கு அவரது மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைக்காததை அடுத்து ஷாஜி ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பான விசாரணையில் இதில் சம்பந்தப்பட்ட எவரும் பணம் பரிமாரப்பட்டது குறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து வினோத் கூறுகையில் தான் ஷாஜி இடம் இருந்து பணம் பெற்றதாகவும் ஆனால் அது தனது தொழில் தொடர்பாக பண பரிவர்த்தனை என்றும் அதற்கும் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

பணம் பெற்றது குறித்து சதீஷ் குமார் கூறுகையில் தான் பணம் பெற்றதாகவும் ஆனால் தனக்கு முழு தொகையும் செலுத்தாததால் தான் MCI  யிடம் இந்த மருத்துவ கல்லூரி அங்கீகாரம் தொடர்பாக அணுகவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் சதீஷும் பணம் பெற்றதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். ராகேஷ் சிவராமன் இது குறித்து கூறுகையில், 5.6 கோடி ரூபாய் செலுத்திய பின்னர் ஷாஜி தன்னை அணுகியதாகவும் இந்த விஷயத்தில் ஷாஜிக்கு அவரது கல்வி நிறுவனம் ஒரு இந்து நிறுவனம் என்ற காரணத்தினால் மட்டுமே தான் தன்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக மாநில பொதுச் செயலாளர் MT ரமேஷிற்கும் இதில் தொடர்பு இருபதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை ஷாஜி எவ்வாறு வினோத்திடம் கொடுத்தார் என்பது தொடர்பான விசாரணையில் MT ரமேஷ்-சும் இது போன்று மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் பெறுவதற்காக உதவியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனை ரமேஷ் மறுத்துள்ளதாக தெரிகிறது.

கேரளா பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் தான் இந்த தகவல் கசிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் கேரளத்தில் காலூன்ற பாஜக கடுமையாக முயற்சித்து வரும் இந்த வேலையில் இது போன்ற செய்தி வெளியாகியிருப்பது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் MCI இது போன்ற பல ஊழல்களில் ஈடுபட்டிருக்குமோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. அதே நாளில் MCI செயல்பாடுகளை கண்காணிக்க ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.