கேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்!

0

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழ் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தமிழகம் முழுவதும் வெள்ள நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதியான ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையினை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா முன்னிலையில் தமிழ் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், கேரள பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில தலைவர் நஸ்ருதீன் இளமறத்திடம் 07.10.2018 அன்று டெல்லியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட்- தேசிய தலைமையகத்தில் வைத்து ஒப்படைத்தார்.

இதற்கு முன்பாக 21.08.2018 அன்று ரூபாய் 50 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பாப்புலர் ஃப்ரண்ட்- மாநில செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம் பாதுஷா மற்றும் ஹக்கீம் ஆகியோர் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மக்களின் பாதிப்பில் தாயுள்ளத்தோடு பங்குபெற்று உதவிகளை நல்கிய தமிழக மக்களுக்கு நஸ்ருதீன் இளமறம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments are closed.