கேள்விக்குறியாகும் சமூக நீதி!

0

கேள்விக்குறியாகும் சமூக நீதி!

ஜனவரி 7, 2019 அன்று மத்திய அமைச்சரவை, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியது. மறுதினம் மக்களவையில், அரசியல் சாசன 124வது திருத்தம், 2019 என்றழைக்கப்பட்ட இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 9 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஜனவரி 12 அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்க அது சட்டமாகியது. பிப்ரவரி 1 முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அவசர அவசரமாக அறிவித்தது. சுதந்திர இந்தியாவில் எந்த மசோதாவும் இவ்வளவு வேகமாக நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றவில்லை என்பதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா குறித்து குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்னராவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நடைமுறை. அப்படி கொடுத்தால்தான் உறுப்பினர்கள் அதை வாசித்து, துறை சார்ந்த வல்லுனர்களிடம் கருத்துகளை கேட்டு, சாதக, பாதகங்களை அறிந்து அது குறித்த விவாதத்தில் ஈடுபட முடியும். ஆனால் இந்த இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்தான் உறுப்பினர்களிடம் கொடுக்கப்பட்டது. லோக் சபா எனப்படும் மக்களவையில் இக்கூட்டத் தொடரின் கடைசி நாளில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படுவதற்கு ஏதுவாக ராஜ்ய சபா கூட்டத் தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. ‘‘நாளைய தினத்திற்கு சபை அலுவல்களை ஒத்தி வைக்கிறேன்’’ என்று ராஜ்ய சபா தலைவர் ஜனவரி 8 அன்று தெரிவித்த போதுதான் கூட்டத் தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது சபை உறுப்பினர்களுக்கே தெரியுமாம்! … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.