கேஸ் டைரி

0

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் கொலை?

உத்தர பிரதேச மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்த 18 வயதிற்கு குறைவான பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் வைத்து மரணித்துள்ளார். அவர் சித்திரவதையின் காரணமாக மரணித்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அவரின் உடம்பில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்தியா மீது போர் தொடுத்த குற்றச்சாட்டு: 17 ஆண்டுகளுக்குப் பின் ஐந்து முஸ்லிம்கள் விடுதலை!

மத்திய பிரதேச மாநிலத்தின் கொஹல்பூரை சேர்ந்த அனீஸ் அகமது, முகம்மது அலி, முகம்மது யூனுஸ், சுல்தான் அகமது மற்றும் கியாசுதீன் ஆகியோரை சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள், இந்தியாவிற்கு எதிராகவும் உசாமா பின் லேடன் மற்றும் தாலிபான்களுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினார்கள் ஆகிய குற்றங்களை சுமத்தி காவல்துறை 2001 அக்டோபரில் கைது செய்தது. வழக்கில் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டாலும் விசாரணை இன்றி வழக்கு எட்டாண்டுகள் கிடப்பில் போடப்பட்டதால் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை கிடைக்காமல் இவர்கள் தவித்து வந்தனர்.


போலி தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு இழப்பீடு!

டெல்லியை சேர்ந்த முகமது ஆமீர் கானை 1997ம் ஆண்டு டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு கைது செய்து 18 வழக்குகளில் இவரை குற்றவாளியாக சேர்த்தது. 14 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு 2012ல் அனைத்து வழக்குகளில் இருந்தும் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

பத்திரிகையில் வெளியான ஆமிரின் செய்தியை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி 2014ம் ஆண்டு விளக்கம் கேட்டது. இந்த நோட்டீசிற்கு 2014 ஏப்ரல் -& மே மாதங்களில் விளக்கமளித்த உள்துறை அமைச்சகம் மற்றும் டில்லி காவல்துறை, டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1996 டிசம்பர் முதல் 1997 டெசம்பர் வரை நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஆமீர் கைது செய்யப்பட்டார் என்றும் இவருடன் மேலும் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த குண்டு வெடிப்புகள் நின்றுவிட்டது என்றும் தெரிவித்திருந்தது.


மத்திய பிரதேச சிறையில் சிமி உறுப்பினர்கள் சித்திரவதை!

மத்திய  பிரதேச சிறையில் 21 சிமி உறுப்பினர்கள் சித்திரவதை செய்யப்படுவதை கண்டறிந்த தேசிய மனித உரிமை ஆணையம் சிறை அதிகாரிகளின் மதவிரோத செயலுக்காக நடவடிக்கை எடுக்க பரிந்துரையும் செய்துள்ளது. சிமி தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்படுவதாக அவர்களின் குடும்பத்தினர் புகாரளித்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் அவற்றை விசாரித்தது. சித்திரவதை செய்யப்படுவதுடன் சிகிச்சைகள் மற்றும் மத உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


 

இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கு: இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் மீதான சம்மன் ரத்து

2004 ஆம் ஆண்டு போலி என்கௌண்டரில் கொலை செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் வழக்கில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகளுக்கு கீழ் நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உளவுத்துறை அதிகாரிகள் ராஜீவ் வாங்கடே மற்றும் வி.ஷி. மிட்டல் ஆகியோருக்கு எதிராக கீழ் நீதிமன்றம் பிறப்பித்த இந்த சம்மனை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யி.ஙி. பாண்டியா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த உளவுத்துறை அதிகாரிகள் இஷ்ரத் ஜஹானின் போலி என்கௌண்டர் நடைபெற்ற போது மத்திய துணை புலனாய்வுத்துறை அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.