கேஸ் டைரி

0

கோரக்பூர்: மருத்துவர் கஃபீல் கானிற்கு பிணை

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரின் பாபா ரகுபர் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் கஃபீல் கான். 2017 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இரவு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் பல குழந்தைகள் உயிரிழந்தனர். அப்போது நிலைமை மேலும் மோசமாவதை தடுக்கும் வகையில் மிக குறுகிய நேரத்தில் 250க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை தனது சொந்த பணத்தில் ஏற்பாடு செய்து பல குழந்தைகளின் உயிரை பாதுகாத்தார் டாக்டர் கஃபீல் கான். இச்சேவைக்கு பரிசாக ஆதித்யநாத் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவர் மீது ஊழல் புகார் சுமத்தியும் குழந்தைகளின் மரணத்திற்கு இவர்தான் காரணம் என்று கூறி கொலை முயற்சி குற்றமும் இவர் மீது சுமத்தப்பட்டது. கஃபீல் கானிற்கு ஜாமீன் கூட வழங்காமல் இழுத்தடித்து பழிவாங்கினர். அவரின் தாயார் கடந்த 2017 டிசம்பர் மாதம் முதல்வரை சந்தித்து தனது மகனிற்காக நீதி வேண்டி முறையிட்டார். உடல்நிலை மோசமாக இருந்த கஃபீல் கானை லக்னோவிற்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்த போதிலும் சிறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றது என்று அவரின் மனைவி குற்றம்சாட்டியிருந்தார்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


 

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை

 

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது ஜோத்பூர் நீதிமன்றம். இந்த தீர்ப்பு நீதிபதி மதுசுதன் ஷர்மாவால் ஜோத்பூர் மத்திய சிறையில் வைத்து வழங்கப்பட்டது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


 

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பா.ஜ.க. வழக்கறிஞர்!

 

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் 12 வயதிற்கு கீழான குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சட்டம் கொண்டு வரப்பட்ட அதே நாளில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயிலில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் 57 வயது வழக்கறிஞர் கே.பி. பிரேம் ஆனந்த். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


 

ரோஹிங்கிய அகதிகள் முகாமை எரித்த இந்துத்துவ தீவிரவாதிகள்

ஏப்ரல் 15ஆம் தேதி டெல்லியின் கலிதிகுன்ஞ் பகுதியில் உள்ள ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பெரும் தீ ஏற்பட்டு அந்த அகதிகள் முகாம் முற்றிலுமாக சேதமடைந்தது. அகதிகள் தங்கள் உடைமைகளையும் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக இழந்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்த சமயத்தில் சமூக வலைதளமான ட்விட்டரில் ரோஹிங்கிய அகதிகள் முகாமை தாங்கள்தான் தீயிட்டு எரித்ததாக பா.ஜ.க. இளைஞரணித் தலைவர் மனிஷ் சந்தெல்லா குறிப்பிட்டிருந்தார். மனிஷ் சந்தெல்லா தனது பதிவில், “ஆமாம், நாங்கள் தான் அதனை செய்தோம். இனியும் செய்வோம், “Rohingya Quit India” என்று பதிவு செய்திருந்தார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

 

Comments are closed.