பா.ஜ.க மதவாத அரசியலில் ஈடுபடுகிறது: கைரானாவை பார்வையிட்ட சாமியார்கள்

0

இந்துக்கள் கூட்டமாக வெளியேரியதாக கூறப்பட்ட கைரானா பகுதியை கடந்த ஞாயிறுக் கிழமை சாமியார்களின் குழு ஒன்று பார்வையிட்டது. முன்னதாக 346 இந்துக் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக பா.ஜ.க எம்.எல்.ஏ. ஹுகும் சிங் கூறி வந்தார். பா.ஜ.க வின் இந்த கூற்றினை மறுத்துள்ளனர் இந்த சாமியார்கள். இந்த குழுவில் ஒருவரான சாமி சக்ரபாணி கூறுகையில், பா.ஜ.க இந்த விஷயத்தில் மதவாத அரசியலில் ஈடுபடுகிறது என்று கூறியுள்ளார்.

அகில பாரதிய சந்த் மகாசபை யின் தலைவரான சாமி சக்ரபாணி கூறுகையில் அந்த பகுதியில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இரு சமுதாயத்தினருமே அங்கு அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து கவலை கொண்டவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார். சக்ரபாணி யுடன் மேலும் நான்கு சாமியார்கள் இந்த களப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “கைரானாவின் பிரச்சனையில் மத சாயம் பூசுவது மிகவும் தவறானது. பா.ஜ.க மற்றும் எம்.பி.ஹுகும் சிங் இதனை வைத்து மதவாத அரசியலில் ஈடுபடுகிறார்கள்.அவர்களின் முழு நோக்கமே இந்துக்கள் மனதில் அச்சத்தை விதைத்து தேதலில் வெற்றி பெறுவதே. இது போன்ற வெறுப்பு அரசியலை நாங்கள் வன்மையாக கண்டிகின்றோம்.” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், “கைரானாவின் பிரச்சனை முஸ்லிம்கள் இந்துக்களை ஆதிக்கம் செலுத்துவது அல்ல. அங்குள்ள பிரச்சனைகள் என்னவென்றால் அங்கு பெருகி வரும் குற்றங்கள் தான். அப்பகுதி ரவுடிகள் எல்லா மத மக்கள்களையும் அச்சுறுத்தி வருகின்றனர். தற்பொழுது அப்பகுதியின் பிரபல ரவுடி முகீம் காலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்னைக்கு மதவாத சாயம் பூசுவது மிகவும் தவறு. இன்னும் மூன்று நாட்களில் இது குறித்த அறிக்கையினை நாங்கள் சமர்ப்பிப்போம்.” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Comments are closed.