கொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்

0

கொரோனா தொற்று நாட்டை அச்சுறுத்திவரும் நிலையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது ஆபத்தானது என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக நரேந்திர மோடிக்கு, பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்), மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற பணிகளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கிவரும் நிலையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகளால் பணியாளர்களுக்கும், மக்களுக்கும் சுகாதார அளவில் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். அதன் காரணமாக நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்” என்று நவீன் பட்நாயக் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எடுக்கப்படவுள்ள கணக்கெடுப்பில் புதிதாகப் பல கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெற்றோர் பிறந்த தேதி, பிறந்த ஊர், உள்ளிட்ட கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனை கருத்தில்கொண்டு கணக்கெடுப்பு நடத்த முடியாது என கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இக்கணக்கெடுப்பை நடத்தபோவதில்லை என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவெற்றியுள்ளன.

Comments are closed.