கொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்

0

நாடு முழுவதும் கொரோனா நோய் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக அவசர கால நிதியை நரேந்திர மோடி உருவாக்கினார். அதில் பலரும் லட்சக்கணக்கான தொகையை செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிர மாநில அமைச்சருமான பிருத்விராஜ் சவாண் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:

“நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க சலுகை திட்டங்களை அறிவிக்கும்போது, எந்த தலைவரும் அதிபரின் சலுகை திட்டம் அல்லது பிரதமரின் சலுகை திட்டம் என்றோ அறிவித்ததில்லை. ஆனால், இந்திய அரசு அறிவித்த சலுகை திட்டங்கள் மட்டுமே ‘பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் திட்டம் (பிஎம் கரீப் கல்யாண் யோஜனா)’ என்று பெயரிடப்பட்டது.

சுயவிளம்பரம் தேடுவதற்கு எந்தவொரு வாய்ப்பையும் மோடி தவற விடுவதில்லை. பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்காக தேசிய மீட்பு நிதியை 1948ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு உருவாக்கினார். அதன் பின்னர் எந்த பிரதமரும் மற்றொரு மீட்பு நிதியை உருவாக்கியதில்லை. தற்போது புதிய நிதியை உருவாக்கியிருக்கும் மோடியின் நடவடிக்கையும் சுயவிளம்பரம் தேடுவதற்கான முயற்சியே” என்று பிருத்விராஜ் சவாண் தெரிவித்துள்ளார்.

Comments are closed.