கொலைகாரகளுக்கு எதிரான நடவடிக்கையை SIT தாமதப்படுத்துகிறது: பன்சாரே மகள் குற்றச்சாட்டு

0

கொலை செய்யப்பட பகுத்தறிவுவாதி பன்சாரேவின் மகள் ஸ்மித்தா பன்சாரே மகாராஷ்டிரா காவல்துறையின் சிறப்பு புலனாவுத் துறை தனது தந்தையின் கொலைகாரர்களான வலது சாரி அமைப்புகள் மீதான நடவடிக்கையை தாமதித்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல்துறை இதுவரை இரண்டு பேரை மட்டும் கைது செய்துள்ளது. அவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் இதுவரை ஏதாவது கூறியிருக்க வேண்டும். மேலும் தபோல்கர் வழக்கில் சாட்சி ஒருவர் சி.பி.ஐ. இடம் பல தகவல்களை அளித்துள்ளார். அது ஊடகங்களிலும் வெளியானது. இருந்தும் காவல்துறை வலதுசாரி இந்து அமைப்புகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை கிளப்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.

எம்.எம். கல்பர்கி கொலை வழக்கிலும் வலதுசாரி அமைப்புகளை நோக்கியே விசாரணை செல்கிறது. “பன்சாரே கொலை வழக்கில் காவல்துறை ஏன் இத்தகைய இயக்கங்களின் நிர்வாகிகளை விசாரிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார். இந்த அமைப்புகளின் தலைவர்கள் யார் யார். அவர்கள் பன்சாரே கொலைக்கு முன்னரும் பின்னரும் என்னென்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து தெளிவற்ற தன்மை நிலவுகிறது. இவை அனைத்தும் காவல் துறையினரால் பதிலளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வழக்கின் முன்னேற்றம் குறித்து விசாரணை அதிகாரிகளால் எந்த ஒரு தகவல்களும் பகிரப்படுவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த இரு கொலை வழக்கிலும் நிறைவான விசாரணை நடத்த அரசு விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “மக்களின் கவனத்தை திசை திருப்பி, இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்களை தப்பிக்க வைப்பதற்கான வழிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. பல மாதங்களாக இந்த கொலைக்கான மூலகர்தாவை கைது செய்ய வேண்டும் என்று அரசிடமும் காவல்துறையிடமும் வேண்டுகோள் வைத்து வருகின்றோம். காவல்துறை கொலை செய்தவர்களை கைது செய்திருக்கலாம். ஆனால் இவர்களை ஏவியவர்களை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

பன்சாரே கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு சனாதான் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த சமீர் கைக்வாத் என்பவரை கைது செய்துள்ளது. தபோல்கர் கொலை வழக்கில் சி.பி.ஐ. விரேந்தரசிங் தாவ்டே என்பவரை கைது செய்துள்ளது. இவரும் சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.