கொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து

0

மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிறுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோகன் பகவத், “மேற்கு வங்கத்தில் நிலவும் சூழல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். கொல்லப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் இதுபோன்ற கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை “வெளியாட்கள்” என்று மம்தா பானர்ஜி அழைப்பது தவறு. மக்கள் நலன்களைச் செயல்படுத்துவதற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையான நடவடிக்கை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.  இதுபோன்ற சம்பவம் மற்ற மாநிலங்களில் நடப்பதில்லை. மேலும், மேற்கு வங்க அரசும் மாநில நிர்வாகமும் கொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கிறது.  இது போன்ற வன்முறை வேறு எந்த மாநிலத்திலும் நடைபெற அனுமதிக்கக் கூடாது”என்று அவர் பேசியுள்ளார்.

Comments are closed.