கொலைமுயற்சி வழக்கில் பாஜக அமைச்சர் மகன் அதிரடி கைது!

0

பாஜக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் மகன் பிரகலாட் படேல், கொலை முயற்சி காரணமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் மணல்கொள்ளை காரணமாக ஏற்பட்ட வன்முறையில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலின் மகன் பிரகலாட் படேல், 4 பேரை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது தலையில் பலத்த காயமடைந்த 50 வயதான ஒருவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி ஜலம் சிங் படேல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, ஆனால் தற்போது வரை அவரை கைது செய்யவில்லை.

தற்போது அமைச்சர் மகன் பிரகலாட் படேல் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Comments are closed.