கொலை, கற்பழிப்பு மிரட்டல் விடுப்பவர்களை இணையத்தில் பின்தொடரும் மோடி

0

இன்றைய சூழலில் இணையதள விவாதங்களில் ஒரு கருத்தை கருத்தால் வெல்ல முடியாத நிலையில் தனிமனித தாக்குதல்களும் இணையதள தொந்தரவுகளும் வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது. அறிவுப்பூர்வமான ஆக்கங்களைக் கொண்டு பதிலளிக்காமல் கும்பலாக சேர்ந்து ஆத்திரத்துடனும் ஆபாச சொற்களை கொண்டும் எதிராளிகளை அச்சுறுத்தி அமைதிகாக்க வைப்பது அல்லது அவர்களை தங்கள் பக்கத்தையே முடக்க வைப்பது என்பது இப்போதைய டிரென்ட். Online Trolls எனப்படும் இத்தகைய கும்பல்களிடம் பல பிரபலங்கள் சிக்கிக் கொண்டாலும் சிலர் தங்களின் சாதுர்ய பதில்களை கொண்டு அவ்வப்போது தப்பியும் விடுவர். ஆனால் எந்த ஒரு பிரபலமும் இத்தகைய ட்ரால்களை அங்கீகரித்ததில்லை. ஒருவரைத் தவிர.

உலகத் தலைவர்களில் இந்த இணையதள குண்டர்களை பின் தொடரும் ஒரே தலைவர் நரேந்திர மோடியாகத்தான் இருக்க முடியும். பொதுவாக தலைவர்களை பல வகையான மக்கள் இணையதளத்தில் பின் தொடர்வார்கள். அவர்களில் ஓவ்வொரு நபரை குறித்தும் அந்த தலைவர்கள் அறிந்திருப்பது கடினம். ஆனால் எந்த தலைவரும் தாங்கள் பின்பற்றும் நபர்களை குறித்து மிகவும் கவனமாக இருப்பார்கள். இவ்விஷயத்தில் நரேந்திர மோடியின் தேர்வு எத்தகையது என்ற கேள்வி பல நேரங்களில் எழுந்துள்ளது.

நரேந்திர மோடி ட்விட்டரில் பின்பற்றும் நபர்களில் ஆச்சர்யமளிக்கும் எண்ணிலான நபர்கள் பிறர் மீது மோசமாக வார்த்தைகளை பயன்படுத்தக் கூடியவர்களாகவோ அல்லது பிறரை அச்சுருத்துபவர்களாகவோ இருப்பது அனைவரும் அறிந்ததே. மோடி பின் தொடரும் நபர்களில் ஊடகவியலாளர்களுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த நபர்களும் அடக்கம். இத்தகையை நபர்களை மோடி ஏன் பின் தொடர வேண்டும் என்ற கேள்விக்கு சுவாதி சதுர்வேதி தனது புத்தகம் ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார்.

இவர் தனது “I am a Troll” என்ற புத்தகத்தில் பா.ஜ.க. வின் இணையதள பிரிவின் செயல்கள் குறித்து விளக்கியுள்ளார். ஊடகத்துறையில் 20 வருடங்களாக பணியாற்றி வரும் இவர், இந்த ட்ரால்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வருகின்றனர்? இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்? இவர்கள் தனிச்சையாக செயல்படுகின்றனரா அல்லது குளுமமாக இணைந்து செயல்படுகின்றனரா என்பது போன்ற கேள்விகளை அடுக்கி அதற்கு விடை தேடியுள்ளார்.

புலனாய்வு பத்திரிகையாளரான இவரின் இந்த விடை தேடலில் வெளியானது பா.ஜ.க இணையதள பிரிவின் குட்டு. பா.ஜ.க இணையதள பிரிவின் முன்னாள் உறுப்பினரான சாத்வி கோஸ்லா, பா.ஜ.க. வின் இணையதள பிரிவு சிறுபான்மையினரையும், ஊடகவியலாளர்களையும், காந்தி குடும்பத்தையும், பன்முகத்தன்மை உடையவர்களையும் குறிவைக்கின்றன என்று கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகர் அமிர்கான் நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்த கருத்து ஒன்றை தெரிவிக்கவே பா.ஜ.க. இணையதள அணியின் ஒரே குறிக்கோளாக அமீர்கானை இணையத்தில் தாக்குவது என்பதே இருந்தது என்றும் அவர்களின் அந்த செயலினால் ஸ்னாப்டீல் நிறுவனம் அமீர்கானை தங்களது விளம்பர தூதர் என்கிற பதவில் இருந்து விலக்கியது என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க இணையதள பிரிவில் தன்னார்வளராக பணியாற்றி வந்த கோஸ்லா 2015 இல் இருந்து அதில் இருந்து விலகியுள்ளார். தனக்கு இந்த குழுவுடன் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்கும் போது தான் அமெரிக்காவில் இருந்ததாகவும் அப்போது இந்த செய்தியை கேட்டதும் தனக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஏற்ப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். தனது கதாநாயகனான மோடி நாட்டில் பல முன்னேற்றனக்ளை கொண்டு வருவார் என்று தான் அப்போது என்னியிருந்ததாக அவர் கூரியுள்ளார்.

தான் அந்த குழுவில் இணைந்து சில மாதங்களில் அங்கு நடக்கும் நிகழ்வுகள் தான் நினைத்தது போல் இல்லை என்று உணர்ந்துள்ளார் கோஸ்லா. பா.ஜ.க இணையதள பிரிவின் தலைவர் அர்விந்த் குப்தா, தங்களின் இலக்கு, UPA அரசு மற்றும் காந்தி குடும்பத்தினை வெளிப்படுத்துவது என்று கூறியிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஊடக பிரபலங்களாக பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போன்றோரை குறிப்பாக இலக்காக்குவது, மற்றும் இன்ன பிற அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்துவது, மோடியை விமர்ச்சிக்கும் அனைவரையும் இணையத்தில் தாக்குவது என்று அக்குழுவின் செயல்பாடுகள் இருந்ததாக கோஸ்லா தெரிவித்துள்ளார்.

தான் அந்த குழுவில் பணியாற்றிய போது, தானே சிறுபான்மையினரையும், காந்தி குடும்பத்தினரையும், மதசார்பற்றவர்களையும், தூற்றி செய்திகள் அனுப்ப வற்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். அர்விந்த் குப்தாவின் உத்தவரின் பேரில் ஊடகவியலாளர் பர்கா தத்திற்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அனுப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை பா.ஜ.க. இணையதள பிரிவு தலைவர் அர்விந்த் குப்தா மறுத்தும் சாத்வி கோஸ்லா தங்களுடன் பணியாற்றியதே இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க. இணையதள பிரிவு இது போன்ற ட்ரால்களை ஆதரிப்பதில்லை என்று குப்தா கூறியுள்ளார். ஆனால் பா.ஜ.க வை விமர்ச்சித்து இணையதளத்தில் பதிவிடுபவர்களுக்கு நடப்பு நிலவரங்கள் எப்படி என்பது நன்றாகவே தெரியும் என்று கூறுகிறார் சுவாதி. மேலும் கோஸ்லா பா.ஜ.க இணையதள பிரிவில் பணியாற்றியதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளார் சுவாதி.

சமூக வலைதளங்களின் சக்தியை தேசத்தின் அனைத்து தலைவர்களுக்கும் முன் நன்றாக உணர்ந்து அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டவர் மோடி என்றும் 2014 தேர்தலில் அவரது வெற்றியை இலகுவாக்கியது இந்த சமூக வலைதள பிரச்சாரங்கள் தான் என்றும் சுவாதி கூறியுள்ளார். தனது புத்தகத்தில் “The BJP Connection” என்று தலைப்பிட்ட அத்தியாயத்தில், பா.ஜ.க. வின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் தான் அக்கட்சியை சமூக வலைத்தளங்களை நோக்கி இழுத்துச் சென்றவர் என்று கூறியுள்ளார் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பல விஷயங்கள் தொடர்பாக துப்பறிந்து செய்திகள் வெளியிட்டுள்ளதாக கூறும் சுவாதி இந்த செய்திக்கான தனது முயற்சி தான் மிகவும் பெரியது என்றும் மிக ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.

“பா.ஜ.க இணையதளத்தில் தனக்கென உருவாக்கிக் கொண்ட உலகம் என்பது மதவெறி பிடித்தது. அதுதான் அவர்களின் வாழ்க்கை நெறி. அவர்கள் தங்களை நம்மைப் போன்று நினைத்துக் கொண்டுள்ளனர், அவர்களுக்கு தாங்கள் வெறுப்புக் கலாச்சாரத்தையும், வெறித்தனத்தையும் ஊக்கிவிக்கும் ஒரு அமைப்பின் ஒரு அங்கம் என்று தெரிவதில்லை. ஒரு குடிமகளாக நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஒரு பெண்ணாக நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர்கள் நாம் வாழும் சமூகத்தை பயங்கரமானதாக மாற்றுகின்றனர். ஆக்கப்பூர்வமாக எதையும் செய்வதை விட்டு அவர்கள் மதவாதத்தை தூண்டுகின்றனர்.” என்று சுவாதி கூறியுள்ளார்.

தனது புத்தகத்தில் அவ்வப்போது இணையதளத்தில் கொலை மிரட்டல்களும் கற்பழிப்பு மிரட்டல்களும் விடும் சில நபர்களை குறிப்பிட்டுள்ள சுவாதி, இத்தகைய நபர்களை மோடி ஏன் பின்பற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒருபுறம் பெண் குழந்தைகள் பற்றியும் அவர்களது வாழ்வு பற்றியும் பேசும் மோடி மறுபுறம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் கற்பழிப்பு மிரட்டல்களையும் கொலை மிரட்டல்களையும் விடுப்பவர்களை பின்தொடர்ந்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

Comments are closed.