கொல்கத்தாவில் பதற்றம்: அமித்ஷா பிரச்சார பேரணியில் வன்முறை!

0

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரசார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் வந்தன.

இந்த நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்திற்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதால்  பாஜகவினர் கோபமடைந்தனர்.

இதனையடுத்து, கொல்கத்தா நகரில் நடைபெற்ற பாஜக பேரணியில் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த வாகனத்தின் மீது கம்புகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் கொல்கத்தா நகர மக்கள் பீதியடைந்துள்ளனர். பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply