கொல்கத்தாவில் பாஜக கலவரம்: வீடியோ ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்த தி.மூ காங்கிரஸ்

0

கொல்கத்தாவில் நடந்த அமீத்ஷா பேரணியில் பெரிய அளவிலான வன்முறை ஏற்பட்டது. வித்யாசாகரின் சிலையும் உடைக்கப்பட்டது.

இந்நிலையில், டெரெக் ஒ ப்ரீன், சுகேந்து சேகர் ரே, மணீஷ் குப்தா மற்றும் நந்திமுல் ஹக் ஆகியோரைக் கொண்ட திரிணாமூல் கட்சி குழுவினர், தேர்தல் ஆணையத்திடம் கலவரம் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

இதுகுறித்து திரிணாமூல் கட்சி குழுவினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வித்யாசாகர் சிலையை பாஜகவினர் உடைத்ததற்கான வீடியோ ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளோம்.  பாஜகவினர் என்ன செய்தார்கள் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்தவில்லை. அமித்ஷா பொய்யர் என்பதையும், ஏமாற்றப் பேர்வழி என்பதையும் இந்த வீடியோ நிருபிக்கிறது. மத்திய பாதுகாப்புப் படைகளை வைத்து பாஜகவுக்கு வாக்கு கேட்கிறார்கள் என்றார்”.

Comments are closed.