கொல்கத்தா: LPG சிலிண்டர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக தலைவர்

0

கொல்கத்தா: LPG சிலிண்டர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக தலைவர்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் LPG சிலிண்டர் டீலர் உரிமையை பெற்றுத்தருவதாக கூற பல நபர்களை ஏமாற்றியதாக பாஜக தலைவர் ரஞ்ஜீத் மஜூம்தார் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர் மேல் அளிக்கப்பட்ட புகார் குறித்து இவரிடம் விசாரணை நடத்திய சில மணி நேரங்களில் இவரை காவல்துறை கைது செய்துள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மோசடியை வங்காளத்தின் பல மாவட்டங்களில் இவர்கள் செய்து வந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சமயல் எரிவாய்வு மற்றும் LPG சிலிண்டர் பெயர்களில் மாநிலத்தில் பெரும் ஊழல் நடைபெற்று வருகிறது என்பதையும் காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. இத்துடன் பாஜக வில் உயர் பதவிகளில் இருக்கும் சிலர் இந்த LPG டீலர் உரிமைகளை பெயர் குறிப்பிட்டு சிலருக்கு வழங்குமாறு தெரிவித்ததாகவும் இதனை உறுதி செய்யும் வகையில் ஆவணங்களும் காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இருந்தும் தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் எதுவும் கூற இயலாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது காவல்துறையால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மஜூம்தார், நல்லாட்சி மற்றும் மத்திய மாநில பாஜக ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். கடந்த ஆக்ஸ்ட் மாதம் இந்த சர்ச்சை எழுந்த நிலையில் இந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

மஜூம்தாரின் கைது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறையினர், அசோக் சர்க்கார் என்ற முன்னாள் பாஜக தலைவர் ஒருவரால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மஜூம்தார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆக்ஸ்டு மாதம் 3 ஆம் தேதி இந்த புகாரில், 2017-2018 ஆம் ஆண்டு காலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட பெட்ரோலிய நிறுவனங்களின் LPG டீலர் உரிமை வழங்குவதில் மிகப்பரும் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் இதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வை சேர்ந்த சிலருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மஜூம்தார் மீது மோசடி மற்றும் கிரிமினல் சாதிதிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் LPG டீலர் உரிமம் பெற ஆசை காட்டப்பட்டு அதில் வெறும் 19 நபர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கி மற்றவர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவர்களிடம் பணம் பெறப்பட்டு பின்னர் டீலர் உரிமம் வழங்கப்படாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கைது குறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், இவ்வழக்கில் மஜூம்தார் போலியாக சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
அவர் எங்களது கட்சியின் உறுப்பினர். நாங்கள் அவரை ஆதரிப்போம். நிதி முறைகேட்டில் யாரும் ஈடுபட்டிருப்பார்களாயின் சட்டம் அதன் கடமையை செய்யும். இவ்வழக்கை பொறுத்தவரை, முர்ஷிதாபாத்தை சேர்ந்த இருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை அவரை கைது செய்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இவ்வழக்கில் மஜூம்தார் பாஜக வின் பெரும்புள்ளிகளின் பெயர்களை கூற வேண்டும் என்று காவல்துறை நிற்பந்தித்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் இவ்வழக்கில் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக போலியான ஒரு வழக்கில் தெற்கு தினாபுர் பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டு 72 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து நாங்கள் போராடினோம். இனியும் போராடுவோம். வீதியிலும், தேர்தலிலும் நீதிமன்றதிற்கு உள்ளும் நாங்கள் போராடுவோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.