கோட்சேவுக்கு இணையதளம்

0

பொதுவாக தங்கள் நாட்டிற்காக உழைத்தவர், நாட்டு விடுதலைக்கு போராடியவர்களை மக்கள் கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால் அகில பாரதிய இந்து மகாசபை அமைப்பு தேசத்தந்தை காந்தியை கொன்ற கோட்சேவை கொண்டாடுகின்றனர்.

நவம்பர் 15 கோட்சே தூக்கில் போடப்பட்ட நாளை தியாகிகள் தினம் என்று கொண்டாடியது இந்த அமைப்பு. அத்தோடு நில்லாமல் தற்பொழுது கோட்சேவின் பெயரில் ஒரு இணையதளமும் துவங்கப்பட்டு இருக்கிறது. அந்த இணையதளத்தில் “காந்தி ஏன் கொல்லப்பட்டார்” என்ற புத்தகமும் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே எழுதிய “காந்தியின் கொலை மற்றும் நான்” என்ற புத்தகமும் பதிவேற்றம் செய்யப்பட்டு இலவசாமாக படிக்க கிடைக்கும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் இதனை ஏற்பாடு செய்தவர்கள் கோட்சேவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாட திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்ப குறிப்பாணையையும் தயார் செய்து வருகின்றனர். காவி மயமாகும் பள்ளி பாட திட்டங்களில் இதுவும் சேர்க்கப்பட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

Comments are closed.