கோட்சே தூக்கிலிடப்பட்ட தினம் தியாகிகள் தினம்?

0

தேசத் தந்தை காந்தியடிகளை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தை தியாக தினமாக கடைப்பிடிக்க இந்துத்துவா பயங்கரவாத அமைப்பான இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.நவம்பர் 15-ஆம் தேதி கோட்சே தூக்கிலிடப்பட்ட தினம்.நாடு முழுவதும் 120 இடங்களில் தியாக தினத்தை(பலி தான் திவஸ்) கடைப்பிடிக்க அகில பாரத இந்து மகா சபை தலைவர் சந்திரபிரகாஷ் கவுசிக் தமது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுக்குறித்து எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கவுசிக் கூறியிருப்பது:காந்தியை விட கோட்ஸே மிகப்பெரிய தேச பற்றாளர்.நாட்டில் பெரும்பாலோர் இவ்வாறு கருதுகின்றனர்.பலி தான் திவஸ் என்பது கோட்ஸே காந்தியை ஏன் கொன்றார்? என்பதைக்குறித்து சிந்திப்பதற்கான வாய்ப்பாகும்.அந்த தினத்தில் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸே எழுதிய ’காந்தி படுகொலை ஏன்?’ என்ற நூல் விநியோகிக்கப்படும்.இந்நிகழ்ச்சியை நடத்த ராஜஸ்தான், மஹராஷ்ட்ரா மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர்.டெல்லியில் பிர்லா மந்திருக்கு அருகில் உள்ள இந்து மகாசபை அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடக்கும்’ என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கோட்ஸேவுக்கு கோயில் கட்டப்போவதாக இந்து மகா சபை அறிவித்திருந்தது.தற்போது பலி தான் திவஸ் கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளது.இவையெல்லாம் தேசத் தந்தை காந்தியடிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தி, அவரை படுகொலைச் செய்த பயங்கரவாதி கோட்ஸேவை புனிதராக மாற்றும் இந்துத்துவா சக்திகளின் திட்டம் என்று கருதப்படுகிறது.

Comments are closed.